இந்த ஆண்டிற்கான பெங்களூரு அணியின் கேப்டன் யார்? – விராட் கோலி கொடுத்த முக்கிய அப்டேட்

kohli-4
- Advertisement -

இந்தாண்டுக்கான பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் வருகிற மார்ச் 26-ம் தேதி முதல் மே-29ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கு உண்டான அதிகாரபூர்வ போட்டி அட்டவணையும் பிசிசிஐ மூலம் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை ஒன்றிணைத்து பயிற்சியும் துவங்கிவிட்டனர்.

இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 9 அணிகளும் தங்களது அணியின் கேப்டன் யார் என்ற விவரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட வேளையில் பெங்களூரு அணி மட்டும் இன்னும் புதிய கேப்டன் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறது. மேலும் வரும் 12-ஆம் தேதி மாலை பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் பெங்களூரு அணியின் நிர்வாக ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளதால் மேக்ஸ்வெல் புதிய கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் மேக்ஸ்வெல் தனது திருமணம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சில போட்டிகளை தவறவிட இருப்பதன் காரணமாக தினேஷ் கார்த்திக் அல்லது டூபிளெஸ்ஸிஸ் ஆகிய இருவரில் ஒருவரை கேப்டனாக நியமிக்க பெங்களூரு அணி ஆலோசித்து வருகிறது என்ற ஒரு தகவலும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக ஆர்.சி.பி அணியின் கேப்டனாக பதவி வகித்த விராட் கோலியின் பதவி விலகல் கடிதத்தை பெங்களூர் அணி நிர்வாகம் இன்னும் ஏற்கவில்லை என்பதனால் மீண்டும் அவரே கேப்டனாக மாறுவார் என்ற ஒரு திடீர் திருப்பம் பெங்களூரு அணியில் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்து தற்போது விராட் கோலியே பேசி தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை ஆர்சிபி நிர்வாகமும் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

- Advertisement -

அந்த வீடியோவில் பேசியுள்ள கோலி கூறுகையில் : மிகச்சிறந்த ஐபிஎல் சீசனை நான் எதிர்நோக்கி உள்ளேன். இந்த புத்துணர்ச்சி பெற்ற அணியுடன் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். அதற்கு காரணம் என்னவென்றால் எனக் கூறுவதோடு விராட் கோலியின் பேச்சு நின்றுவிடுகிறது. மேலும் மார்ச் 12ஆம் தேதி முழுமையான வீடியோ வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் அடிப்படையில் பார்க்கையில் கோலியே மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்பது உறுதியாகி உள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகளை குவிக்க தவறிய டாப் 3 மோசமான கேப்டன்கள் – லிஸ்ட் இதோ

ஏனெனில் சமீபத்தில் ஆர்சிபி அணி சார்பாக வெளியிடப்பட்ட கேப்டன் குறித்த கட் அவுட்டில் கோலியின் உருவமே இருந்ததால் தற்போது மீண்டும் கோலியே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை கேப்டனாக விராட் கோலி தொடரும் பட்சத்தில் நிச்சயம் ஆர்சிபி அணிக்கு இந்த ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Advertisement