ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகளை குவிக்க தவறிய டாப் 3 மோசமான கேப்டன்கள் – லிஸ்ட் இதோ

IPL-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி 65 நாட்கள் நடைபெற உள்ளது. வரும் மார்ச் 26 ஆம் தேதியன்று துவங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த 15 ஆவது ஐ.பி.எல் தொடர் முழுவதுமாக இந்தியாவிலே நடைபெறும் விதமாக அட்டவணை வகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.

ipl

- Advertisement -

இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய 2 அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் வழக்கமாக நடைபெறும் 60 போட்டிகளுக்கு பதிலாக 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் இந்த வருடம் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. குறிப்பாக வரும் மார்ச் 26 – மே 22 ஆம் தேதி வரையில் நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே ஆகிய 2 நகரங்களில் மட்டும் நடைபெறும் உள்ளது.

மோசமான கேப்டன்கள்:
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் துவங்கி நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். சொல்லப்போனால் இதன் காரணமாகவே தற்போது 3 வகையான இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகும் அளவுக்கு அவர் வளர்ந்து உயர்ந்துள்ளார்.

IPL

அவரைப்போல இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த மகத்தான கேப்டனாக சாதனை படைத்த எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆரம்பம் முதல் அபாரமாக கேப்டன்ஷிப் செய்து 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான கேப்டனாக அவர் ஜொலிக்கிறார். இவர்களுடன் கௌதம் கம்பீர், டேவிட் வார்னர் போன்ற மேலும் சில வீரர்களும் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக இருந்துள்ளார்கள்.

- Advertisement -

மேலும் கோப்பைகளை பெற்றுக் கொடுக்காத விராட் கோலி போன்றவர்கள் கூட புள்ளிவிவர அடிப்படையில் இந்த தொடரில் வெற்றிகரமாக இருந்துள்ளார்கள். இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்ட போதிலும் ஐபிஎல் தொடரில் வெற்றியை ருசிக்க தவறிய 3 மோசமான ஐபிஎல் கேப்டன்கள் பற்றி பார்ப்போம்.

1. குமார் சங்ககாரா : சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினுக்கு பின் அதிக ரன்கள் குவித்த வீரராக உலக சாதனை படைத்துள்ள குமார் சங்ககாரா ஐபிஎல் வரலாற்றில் டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட 3 அணிகளுக்காக கேப்டன்ஷிப் செய்துள்ளார். 2009ஆம் ஆண்டு முதல் முறையாகஅவர் தலைமையில் விளையாடிய பஞ்சாப் அணி 5வது இடத்தை மட்டுமே பிடித்தது.

- Advertisement -

அதன்பின் 2011 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக கேப்டன்ஷிப் செய்த அவர் தலைமையில் அந்த அணி 7-வது இடத்தை மட்டுமே பிடித்தது. மொத்தத்தில் 47 ஐபிஎல் போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த அவர் அதில் வெறும் 15 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளார். 30 போட்டிகளில் தோல்வி அடைந்ததன் வாயிலாக 34.04% வெற்றி சராசரியை மட்டுமே பெற்றுள்ள அவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் மோசமான கேப்டன் என்ற மோசமான சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.

Jayawardene

2. மகிளா ஜெயஸ்வர்தனே: சங்கக்காரவின் நெருங்கிய நண்பர் மற்றும் இலங்கையின் மற்றொரு ஜாம்பவான் மகிளா ஜெயவர்தனே இலங்கை அணிக்காக ஒரு மிகச்சிறந்த கேப்டனாக செயல்பட்டவர். இவரும் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா போன்ற அணிகளுக்கு கேப்டன்ஷிப் செய்த போதிலும் பெரிய அளவில் வெற்றிகளை வாங்கி தர முடியவில்லை. மொத்தத்தில் 30 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த அவர் வெறும் 9 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளார். அவர் தலைமையில் விளையாடிய ஐபிஎல் அணிகள் 16 போட்டிகளில் தோல்வி அடைந்தது. ஒரு போட்டி டையில் முடிந்தது.

3. அஜிங்கிய ரஹானே : இன்று டெஸ்ட் போட்டிகளில் கூட ரன்கள் அடிக்க முடியாமல் தடுமாறித் இந்திய அணியில் தனது இடத்தை தொலைத்து நிற்கும் அஜின்க்யா ரகானே ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் அதிரடியாக பேட்டிங் செய்து கேப்டனாகும் அளவுக்கு ஜொலித்தவர். சொல்லப்போனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நீண்ட நாட்கள் கேப்டனாக இருந்த அவர் அதை பயன்படுத்தி தான் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்தார்.

Rahane

இருப்பினும் அதில் பெரிய அளவு வெற்றிகளை குவிக்க தவறியதுடன் ரன்களும் குவிக்க திணறியதால் தற்போது விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. மொத்தமாக 25 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அவர் அதில் 9 வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொடுத்தார். 16 போட்டிகளில் அவர் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி அடைந்தது.

Advertisement