- Advertisement -
ஐ.பி.எல்

அந்த ஒரு ஷாட்டை என்னால விளையாட முடியாமல் போனா நான் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கிடுவேன் – விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாச கஷ்டப்பட்டு வருகிறார். அதோடு அவரது கேப்டன்சியில் முக்கிய பல தொடர்களை இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் ஐ.சி.சி நடத்திய கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்பதன் காரணமாக அவர் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் கேப்டன் பதவியை துறந்த விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஐபிஎல் தொடரிலும் அவரால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை. அதோடு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 236 ரன்களை மட்டுமே கோலி விளாசியுள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி மூன்று முறை இந்த தொடரில் கோல்டன் டக் அவுட்டாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் குறித்து கவலையில் உள்ளனர். அடுத்து வரும் கடைசி போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்கிற நிலையில் விராட் கோலி அந்த போட்டியில் எந்த அளவுக்கு உதவப் போகிறார் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து தற்போது சில கருத்துக்களை மனம் திறந்து பேசியுள்ள விராட் கோலி கூறுகையில் : என் வாழ்க்கையின் மிக அழகான நாட்களில் நான் தற்போது உள்ளேன். பழைய நாட்களையும் திரும்பிப் பார்த்து ரசித்து வருகிறேன். எனது அனுபவங்களே எனக்கு பயத்தை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

என்னைப் பற்றி உலகமே பெரிய அளவில் பேசி வருகின்றனர். அதனால் அந்த அழுத்தத்தை கையாள்வது சற்று சிரமமாக உள்ளது. எனக்கு முன்பு போல கவர் ட்ரைவ் விளையாட வரவில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் எனது கவர் ட்ரைவ் என்பது எப்போதுமே அழியாத ஒன்று. நான் நிச்சயம் என்னுடைய கடைசி கிரிக்கெட் நாள்வரை அவற்றை அடிப்பேன்.

இதையும் படிங்க : புதிய ரன் மெஷின் கேஎல் ராகுல் ! ரெய்னா, விராட் கோலி கூட படைக்காத புதிய ஐபிஎல் வரலாற்று சாதனை

அப்படி ஒருநாள் என்னால் அந்த ஷாட்டை விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் நான் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பேன் என்று விராட் கோலி தனது ஓய்வு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by