- Advertisement -
ஐ.பி.எல்

இப்படி விளையாடுனா எப்படி ஜெயிக்க முடியும். மோசமான தோல்விக்கு பிறகு கடுப்பாகி பேசிய – ஹார்டிக் பாண்டியா

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் மட்டுமே குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்களையும், மனிஷ் பாண்டே 42 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே குவித்தது. மும்பை அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 56 ரன்களையும், டிம் டேவிட் 24 ரன்களையும் குவித்தனர்.

இதன் காரணமாக கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் : பேட்டிங்கின் போது சரியான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம்.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பாட்னர்ஷிப் இல்லாமல் விளையாடினால் நிச்சயம் அது உங்களுக்கு தோல்வியை பரிசளிக்கும். இந்த தோல்வி குறித்து நிறைய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டி உள்ளது. ஆனால் தற்போது நான் அதிகமாக பேச விரும்பவில்லை. இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.

இதையும் படிங்க : அவர் கொல்கத்தாவின் லெஜெண்ட்.. 12 வருஷம் கழிச்சு சாதிச்சுட்டோம்.. மும்பையை வீழ்த்திய திட்டம் பற்றி பேசிய வருண்

ஆனால் முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்சின் போது மைதானம் சற்று பந்துவீச்சுக்கு உதவியதாகவே தோன்றுகிறது. இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் சரியாக பேட்டிங் செய்யாததாலே இந்த தோல்வி ஏற்பட்டது என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -