புதிய ரன் மெஷின் கேஎல் ராகுல் ! ரெய்னா, விராட் கோலி கூட படைக்காத புதிய ஐபிஎல் வரலாற்று சாதனை

KL Rahul LSG Quinton De Kock vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 18-ஆம் தேதி நடைபெற்ற 66-ஆவது லீக் போட்டியில் லக்னோவிடம் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்த கொல்கத்தா 14 போட்டிகளில் 8 தோல்விகளை பதிவு செய்து மும்பை, சென்னையை தொடர்ந்து 3-வது அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. நவிமும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அவுட்டே ஆகாமல் கொல்கத்தா பவுலர்களை பிரித்து மேய்ந்து 210/0 ரன்கள் சேர்த்தனர்.

Quinton De Kock KL Rahul 2

- Advertisement -

ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இவர்களை கடைசி வரை அவுட் செய்ய முடியாமல் கொல்கத்தா விழி பிதுங்கி நிற்க ஒருபுறம் மெதுவாக பேட்டிங் செய்த ராகுல் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 68* (51) ரன்கள் எடுத்தார். மறுபுறம் சரவெடியாகவும் பட்டாசாக வெடித்த குயின்டன் டி காக் 10 பவுண்டரி 10 சிக்சருடன் 140* (70) ரன்கள் குவித்தார்.

போராடிய கொல்கத்தா:
அதனால் வரலாற்றில் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் வார்னர் ஜானி பேர்ஸ்டோவின் (185 ரன்கள், பெங்களூருவுக்கு எதிராக, 2019) ஆல் டைம் சாதனைகளையும் உடைத்து புதிய சாதனையை இந்த ஜோடி படைத்தது. அதை தொடர்ந்து 211 என்ற இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு வெங்கடேஷ் ஐயர் 0 (4) அபிஜித் தோமர் 4 (8) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே தோல்வியை உறுதி செய்தனர்.

Quinton De Kock KL Rahul 2

அந்த நிலைமையில் களமிறங்கிய நித்திஸ் ராணா அதிரடியாக 42 (22) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அவருடன் ஜோடி போட்டிருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 50 (29) ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார். அடுத்து வந்த சேம் பில்லிங்ஸ் தனது பங்கிற்கு அதிரடியாக 36 (24) ரன்களில் அவுட்டான நிலையில் காப்பாற்றுவார் என கருதப்பட்ட ஆண்ட்ரே ரசல் 5 (11) அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். ஆனாலும் கடைசி நேரத்தில் சுனில் நரேன் 7 பந்துகளில் 3 சிக்சருடன் 21* ரன்கள் எடுத்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

லக்னோ தகுதி:
அப்போது ஆஸ்திரேலியாவின் ஸ்டோனிஸ் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட இளம் இந்திய வீரர் ரிங்கு சிங் 4, 6, 6, 2 என 18 ரன்களை தெறிக்கவிட்டு வெற்றிக்கு போராடினார். ஆனால் 5-வது பந்தில் அடித்த பவுண்டரியை சூப்பர்மேனை போலத் தாவி கேட்ச் பிடித்ததால் அவரின் 40 (15) ரன்கள் போராட்டம் வீணானது. ஏனெனில் இறுதிப் பந்தில் உமேஷ் யாதவை கிளீன் போல்ட் செய்த ஸ்டோனிஸ் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதனால் பங்கேற்ற 14 போட்டிகளில் 9-வது வெற்றியைப் பதிவு செய்த கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ குஜராத்தை தொடர்ந்து 2-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.

Evin Lewis Rinu SIngh Catch

கடந்த 2020, 2021 ஆகிய வருடங்களில் பஞ்சாப் அணிக்கு பேட்டிங்கில் ரன் மழை பொழிந்து கேப்டனாக வழி நடத்திய போதிலும் இதர வீரர்கள் சொதப்பியதால் அந்த அணியை கேஎல் ராகுல் பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. ஆனால் இம்முறை தம்மை 16 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு நம்பி வாங்கிய புதிய அணியான லக்னோவுக்கு பேட்டிங்கிலும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்ட கேஎல் ராகுல் முதல் சீசனிலேயே பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்று அசத்தியுள்ளார்.

- Advertisement -

ரன் மெஷின்:
கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் ரன் மழை பொழிந்து வரும் கேஎல் ராகுல் நேற்றைய போட்டியில் எடுத்த 68 ரன்களையும் சேர்த்து இந்த சீசனில் 537* ரன்களைக் குவித்து அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் பட்லருக்கு (627* ரன்கள்) பின் 2-வது இடத்தில் உள்ளார். மேலும் 2018 முதல் 2022 வரை முறையே 659, 593, 670, 626, 537* என கடந்த 5 வருடங்களாக 500க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து வரும் அவர் “ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 சீசன்களில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த முதல் பேட்ஸ்மேன்” என்ற புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Rahul

இதற்குமுன் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற யாருமே இதுபோல 500 ரன்களை 5 வருடங்களில் தொடர்ச்சியாக எடுத்தது கிடையாது. ஐபிஎல் தொடரில் 2008 – 2015 வரை அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சுரேஷ் ரெய்னாவும் அதற்குப் பின் 2022 வரை விராட் கோலியும் இருக்கின்றார். ஆனால் சமீப காலங்களில் அவர்களை விட அற்புதமாக பேட்டிங் செய்து வரும் கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் புதிய ரன் மெஷினாக அசத்துகிறார் என்றே கூறலாம்.

இதையும் படிங்க : ரொம்ப பாவம் ! அறிமுக போட்டியிலேயே சொதப்பிய இளம் வீரர், வதம் செய்த டீ காக் – நடந்தது இதோ

மேலும் ஐபிஎல் தொடரில் அதிக சீசன்களில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த 2-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் ராகுல் பெற்றுள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. டேவிட் வார்னர் : 6 (2014, 2015, 2016, 2017, 2019, 2020)
2. விராட் கோலி : 5 (2011, 2013, 2015, 2016, 2018)
2. ஷிகர் தவான் : 5 (2012, 2016, 2019, 2020, 2021)
2. கேஎல் ராகுல் : 5* (2018, 2019, 2020, 2021, 2022)

Advertisement