ரொம்ப பாவம் ! அறிமுக போட்டியிலேயே சொதப்பிய இளம் வீரர், வதம் செய்த டீ காக் – நடந்தது இதோ

Quinton De Kock 140 Abhijith Tomar
- Advertisement -

கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த வகையான போட்டியாக இருந்தாலும் அதில் பேட்ஸ்மேன் கொடுக்கும் கேட்சை பிடிக்க வேண்டியது ஒவ்வொரு பீல்டரின் இன்றியமையாத கடமையாகும். அதிலும் ஒரு பேட்ஸ்மேன் ஆரம்பத்திலேயே இருக்கும்போது கொடுக்கும் கேட்ச் பிடித்து விட்டால் வெற்றி எளிதாகிவிடும். இல்லையேல் அதற்காக காலத்திற்கும் வருந்தும் அளவுக்கு அந்த பேட்ஸ்மேன் சொல்லி அடித்து வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத தோல்வியை பரிசளித்து விடுவார். அது போன்ற நிகழ்வுகளை வரலாற்றில் பல முறை பார்த்து உள்ள நமக்கு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மீண்டுமொரு நிகழ்வு கிடைத்துள்ளது.

Quinton De Kock KL Rahul 2

- Advertisement -

மே 18-ஆம் தேதி நடைபெற்ற 66-ஆவது லீக் போட்டியில் லக்னோ – கொல்கத்தா அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட் செய்வதாக அறிவித்த நிலையில் கொல்கத்தாவுக்கு இளம் வீரர் அபிஜித் தோமர் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பைப் பெற்றார். அதை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் – குவின்டன் டி காக் ஓபனிங் ஜோடி முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக ரன்களை குவிக்க முயற்சித்தது.

12 முதல் 140 ரன்கள்:
அப்போது உமேஷ் யாதவ் வீசிய 3-வது ஓவரை எதிர்கொண்ட குயின்டன் டி காக் கேட்ச் கொடுக்க அது தேர்ட் மேன் பகுதியில் நின்று கொண்டிருந்த இளம் வீரர் அபிஜித் தோமர் கைக்கு செல்ல அவர் அந்த எளிதான கேட்ச்சை கோட்டை விட்டார். அப்போது வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த குயின்டன் டி காக் அதை பயன்படுத்தி இரட்டை மடங்கு அதிரடியை காட்டி ஒவ்வொரு ஓவரிலும் கொல்கத்தா பவுலர்களை சொல்லி சொல்லி அடித்து மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவருக்கு உறுதுணையாக நின்ற கேப்டன் கேஎல் ராகுல் ஒருபுறம் 68* (51) ரன்கள் எடுத்து பொறுமையாக பேட்டிங் செய்ய மறுபுறம் சதமடித்தும் ஓயாத குயின்டன் டி காக் கொல்கத்தா பவுலர்களை கதற விட்டார்.

இறுதிவரை சிம்ம சொப்பனமாக நின்ற இந்த ஜோடி அவுட்டாகாமல் 20 ஓவர்களில் 210/0 ரன்கள் சேர்த்தது. அதிலும் அபிஜித் தோமர் கோட்டை விட்ட குயின்டன் டி காக் 10 பவுண்டரி 10 சிக்சர்களை பறக்கவிட்டு ருத்ரதாண்டவம் ஆடி 140* (70) ரன்களை விளாசினார். அதனால் வரலாற்றிலேயே 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த ஜோடி என்ற சாதனையை படைத்த அவர்கள் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற டேவிட் வார்னர் – ஜானி பேர்ஸ்டோ ஜோடியின் (185 ரன்கள், பெங்களூருவுக்கு எதிராக, 2019) ஆல் டைம் சாதனையையும் உடைத்து புதிய சாதனை படைத்தனர்.

- Advertisement -

பேட்டிங்கிலும் சொதப்பல்:
ஒருவேளை அவர் மட்டும் அந்த கேட்சை சரியாக பிடித்திருந்தால் நிச்சயமாக டீ காக் 140 ரன்களும் அடித்திருக்க முடியாது லக்னோவும் 210 ரன்களும் எடுத்திருக்க முடியாது. சரி பீல்டிங்கில் தான் அப்படி என்று பார்த்தால் 211 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரராக களமிறங்கிய அவர் 4 (8) ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே மீண்டும் தோல்வியை உறுதி செய்தார். அவருடன் வெங்கடேஷ் ஐயர் டக் அவுட்டாக அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா 42 (22) கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 50 (29) என அதிரடியாக ரன்களை எடுத்து போராடி அவுட்டானார்கள்.

ஆனால் அடுத்து வந்த சாம் பில்லிங்ஸ் தம்மால் முடிந்த 36 (24) ரன்களை அதிரடியாக எடுத்து ஆட்டமிழந்த நிலையில் காப்பாற்றுவார் என கருதப்பட்ட ரசல் 5 (11) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் சுனில் நரேன் 21* (7) ரன்களும் ரிங்கு சிங் 40 (15) ரன்கள் எடுத்து போராடிய போதிலும் 20 ஓவர்களில் 208/8 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

கேட்சஸ் வின் மேட்ச்ஸ்:
பொதுவாக கேட்சஸ் வின் மேட்சஸ் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்த போட்டி அமைந்தது. ஏனெனில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட போது ஸ்டோனிஸ் வீசிய அந்த ஓவரை எதிர்கொண்ட ரின்கு சிங் அதிரடியாக 4, 6, 6, 2 என 18 ரன்களை எடுத்து வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தபோது 5-வது பந்தில் பவுண்டரி அடிக்க முயன்றார்.

ஆனால் அப்போது சூப்பர்மேனை போல பறந்து வந்த எவின் லெவிஸ் கடினமான கேட்ச்சை அற்புதமாக பிடிக்க கடைசி பந்தில் உமேஷ் யாதவ்வை ஸ்டோனிஸ் கிளீன் போல்ட் செய்ததால் தோல்வியின் பிடியில் சிக்கிய லக்னோ திரில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : கொல்கத்தா பவுலர்களை பிரித்து மேய்ந்த குயின்டன் டீ காக் ! 2 புதிய ஆல் டைம் வரலாற்று சாதனை

மொத்தத்தில் பிடிக்கவே முடியாது என்ற கடினமான பந்தை பிடித்த எவின் லீவிஸ் கேட்ச் தான் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. ஆனால் பிடிக்க வேண்டிய எளிதான கேட்ச்சை அபிஜித் தோமர் விட்டதால் தோல்வி கிடைத்தது. இளம் வீரரான அவருக்கு அறிமுக போட்டியிலேயே சற்று பதற்றம் இருந்திருக்கும் என்றாலும் ஒரு எளிமையான கேட்சை பிடிக்காமல் சொதப்பியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது. மேலும் அறிமுக போட்டியிலேயே காலத்திற்கும் மறக்க முடியாத அளவுக்கு குயின்டன் டி காக் அவருக்கு நெஞ்சை உடைக்கும் தோல்வியையும் பரிசளித்தார்.

Advertisement