- Advertisement -
ஐ.பி.எல்

இம்பேக்ட் வீரராக வந்தும் அசத்திய கிங் கோலி.. நடப்பு தொடரின் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தல் – விவரம் இதோ

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது நான்காவது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

முதலிடத்திற்கு முன்னேறிய விராட் கோலி :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே குவிக்க பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 15.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 149 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 36 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 49 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறாத அவர் சேஸிங்கின் போது இம்பாக் பிளேயராக வந்து மிகச்சிறப்பான துவக்கத்தை அளித்ததால் ஆர்.சி.பி அணி மிக எளிதாக இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்ததால் இந்த போட்டியில் முதல் முறையாக அவர் பிளேயிங் லெவனில் இடம் பெறாமல் இம்பேக்ட் வீரராக விளையாடி இருந்தார். இவ்வேளையில் இம்பேக்ட் வீரராக வந்து 49 ரன்கள் அடித்ததன் மூலம் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மனாக நேற்று ஆரஞ்சு தொப்பியை தன் வசப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கு விழுந்த மிகப்பெரிய அடி.. எஞ்சிய தொடரில் இருந்து வெளியேறிய – நட்சத்திர வீரர்

அந்த வகையில் நேற்றைய போட்டிக்கு முன்னதாக ஹென்றிச் கிளாஸன் 5 போட்டிகளில் விளையாடி 224 ரன்கள் குவித்திருந்த வேளையில் தற்போது விராட் கோலி 5 போட்டிகளில் விளையாடி 228 ரன்களை குவித்து இந்த 2026 ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -