சி.எஸ்.கே அணிக்கு விழுந்த மிகப்பெரிய அடி.. எஞ்சிய தொடரில் இருந்து வெளியேறிய – நட்சத்திர வீரர்

Khaleel Ahmed
- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பத்தாவது இடத்தை பிடித்து வெளியேறியிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு 2026 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக மினி ஏலத்தின் போது பல்வேறு இளம் வீரர்களை தேர்வு செய்த சென்னை அணி புத்துணர்ச்சியுடன் மீண்டும் மிகச்சிறப்பான கம்பேக் கொடுக்கும் வகையில் தயாராகி வந்தது. ஆனால் இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர்கள் அடுத்தடுத்து மூன்று தோல்விகளை பெற்று இந்த தொடரை மோசமாகவே ஆரம்பித்தனர்.

எஞ்சியுள்ள ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய நட்சத்திர வீரர் :

ஆனால் கடைசியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று தற்போதைய நிலையில் 5 போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் நான்கு புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

இதன் காரணமாக இனிவரும் போட்டிகளிலும் வெற்றி பெற்று சென்னை அணி பிளேஆப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைக்கும் வகையில் விளையாடும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த சி.எஸ்.கே அணி கடைசியாக நடந்த இரண்டு போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள வேளையில் தற்போது சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் நட்சத்திர வீரர் ஒருவர் இந்த எஞ்சியுள்ள 2026 ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் கடைசியாக நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக போட்டியின் போது பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது கடைசி ஓவரை வீசும் போது இடுப்பு பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டு பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தொடைப்பகுதியில் தசை நார் கிழிவு இருப்பது உறுதியானது.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே ரசிகர்களுக்காக வெளியான நற்செய்தி.. தோனி விளையாடப்போகும் போட்டி இதுதான் – விவரம் இதோ

கிரேடு 2 வகையான காயம் இது என்பதனால் அந்த காயத்தில் இருந்து அவர் குணமடைய குறைந்தது 10 முதல் 12 வாரங்கள் ஓய்வு தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எஞ்சியுள்ள 2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து கலீல் அகமது அதிகாரப்பூர்வமாக வெளியேறுவார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement