பேட்டிங்கில் தொடர் சொதப்பல். போட்டி முடிந்ததும் கோலியை அழைத்து பேசிய லாரா – என்ன சொன்னாரு தெரியுமா?

Lara
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராத் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்பது நாம் அறிந்ததே. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சதம் அடிக்க முடியாமல் மிகவும் திணறி வருகிறார். அதோடு கேப்டன் பொறுப்பில் அழுத்தத்தை சந்திப்பதால் தான் இந்த நிலைமை ஏற்படுகிறது என்று சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் அவர் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டம் பிரமாதமாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

lara 1

- Advertisement -

ஆனால் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 8 போட்டிகளிலும் சேர்த்து 119 ரன்களை மட்டுமே குவித்துள்ள அவர் சொற்ப ரன்களில் தொடர்ந்து ஆட்டமிழந்து வருகிறார். அதுமட்டுமின்றி நடப்பு தொடரில் இரண்டு முறை தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். விராட் கோலியின் இந்த பேட்டிங் பார்ம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி தொடர்ச்சியாக விராட் கோலி மோசமாக விளையாடி வரவே முன்னாள் வீரர்கள் பலரும் அவருக்கு தற்போதைய நேரத்தில் ஓய்வு என்பது அவசியம் என்றும் அவர் முறையான ஓய்வு எடுத்துக் கொண்டு சீரான பயிற்சிக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட திரும்பினால் அவரால் மீண்டும் ரன்களை குவிக்க முடியும் என்றும் இழந்த தனது பார்மை மீட்டெடுப்பார் என்றும் கூறிவருகின்றனர்.

williamson

மேலும் தற்போதைக்கு அவருக்கு ஓய்வு என்பது அவசியம் என்றும் தங்களது அறிவுரைகளை வழங்கியிருந்தனர். இந்நிலையில் சன்ரைஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆன பிரையன் லாராவை சந்தித்து அவரிடம் இருந்து சில பேட்டிங் டிப்ஸ்களை விராட்கோலி பெறும் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி தனது பேட்டிங்கில் தான் சந்திக்கும் சூழல் குறித்த விவரங்களை கோலி அவரிடம் கூறுவது போலவும் அதற்கு தன்னால் முடிந்த பதில்களை லாரா அளிப்பது போலவும் அந்த புகைப்படங்கள் இருக்கின்றன. மேலும் விராட் கோலிக்கு லாரா சுட்டிக்காட்டியது யாதெனில் : விராட் கோலி விளையாடும் ஷாட்கள் மற்றும் அவர் பந்தினை தேர்வு செய்து ஆடும் முறையில் உள்ள தவறுகள் என அனைத்தையும் விராட் கோலிக்கு லாரா சுட்டிக் காண்பித்தார்.

இதையும் படிங்க : கவுண்டி கிரிக்கெட்டில் அசத்தல். சம்பவம் செய்த புஜாரா. என்ன தெரியுமா? – இந்திய அணிக்குள் மீண்டும் வருவாரோ?

நீண்டநேரம் லாரா வழங்கிய பேட்டிங் அறிவுரைகளை விராட்கோலி மிக கவனமாக காது கொடுத்து கேட்டார். அதுமட்டுமின்றி மேலும் தொடர்ந்த அவர்களது உரையாடலானது அடுத்ததாக வில்லியம்சன் உடன் இணைந்து மேலும் தொடர்ந்தது. இப்படி லாரா மற்றும் வில்லியம்சன் என இருவரிடமும் நேரத்தினை செலவிட்ட விராட் கோலி அவர்களிடம் இருந்து பல அறிவுரைகளை கேட்டு பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement