டி20 கிரிக்கெட்டை தொடர்ந்து டெஸ்ட் தரவரிசையிலும் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ள – விராட் கோலி

Kohli-1
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களை கணக்கில் கொண்டு மூன்று வகையான கிரிக்கெட்க்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் வெளியான டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இருந்து வெளியே தள்ளப்பட்ட விராட் கோலி தற்போது வெளியாகியுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் மிகப்பெரிய சறுக்கல் சந்தித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ரன் குவிக்கும் ரன் மெஷினாக பார்க்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கொல்கத்தா டெஸ்ட் போட்டிக்கு பிறகு கடந்த இரு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் விளையாடி வருவதால் அவர் இந்த சறுக்கலை சந்தித்துள்ளார். மேலும் அவரை விட தற்போது ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி ரோகித் சர்மா டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

- Advertisement -

அதன்படி தற்போது வெளியாகியுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூ 903 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஸ்டீவ் ஸ்மித்(891) இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அதற்கடுத்து 3வது இடத்தில் வில்லியம்சன்(888), நான்காவது இடத்தில் லாபுஷேன்(878), ஐந்தாவது இடத்தில் ரோகித் சர்மா(805) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எப்போதும் மூன்று வகையான கிரிக்கெட் தரவரிசை பட்டியலிலும் ஆதிக்கத்தை செலுத்தி வரும் விராட் கோலி கடந்த ஆண்டிலிருந்து மோசமான நிகழ்வுகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 775 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் : 3 வீரர்கள் காயம் காரணமாக வெளியேற்றம் – பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த கான்பூர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத விராட் கோலி மும்பையில் துவங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement