இரண்டாவது டெஸ்ட் : 3 வீரர்கள் காயம் காரணமாக வெளியேற்றம் – பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் போட்டி டிராவில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க இருந்த இப்போட்டி தற்போது வரை மழை காரணமாக துவங்காமல் தாமதமாகி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த போட்டிக்கு திரும்புவதால் அணியில் எந்தெந்த மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த இரண்டாவது போட்டியில் செய்யப்படவுள்ள மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, ஆல் ரவுண்டர் ஜடேஜா மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரஹானே ஆகியோர் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி இசாந்த் சர்மாவிற்கு பதிலாக முகமத் சிராஜ், ரஹானேவிற்கு பதிலாக விராட் கோலி, ஜடேஜாவிற்கு பதிலாக ஜெயந்த் யாதவ் விளையாட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இவர்கள் மூவருக்கும் பதிலாக யார் விளையாடுவார்கள் என்பது டாசிற்கு பிறகே தெரியவரும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆர்.சி.பி அணியின் அடுத்த கேப்டன் இவர்தான். கோலியும் அவரைத்தான் ஆதரிப்பார் – டேனியல் வெட்டோரி

மேலும் நியூசிலாந்து அணி சார்பாக கேப்டன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என்றும் டாம் லேதம் கேப்டனாக விளையாடுவார் என்றும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement