ஆர்.சி.பி அணியின் அடுத்த கேப்டன் இவர்தான். கோலியும் அவரைத்தான் ஆதரிப்பார் – டேனியல் வெட்டோரி

Vettori
Advertisement

அடுத்த ஏப்ரல் மாதம் துவங்க உள்ள 15-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ள வேளையில் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்களது அணிகளில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வெளியிட்டு இருந்தனர். அதன்படி பெங்களூரு அணியில் மூன்று வீரர்கள் அந்த அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கேப்டன் பதவியில் இருந்து விலகிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலாவது நபராக பெங்களூரு அணியால் தக்க வைக்கப்பட்டார்.

rcb

அதனைத் தொடர்ந்து இரண்டாவது வீரராக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் மற்றும் 3-வது வீரராக முகமது சிராஜ் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஏற்கனவே விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட மாட்டார் என்று தெரிவித்துள்ளதால் அடுத்த ஆர்சிபி அணியின் கேப்டன் யார் ? என்பது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளதால் ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனாக மேக்ஸ்வெல் தான் இருப்பார். ஏனெனில் ஆர்சிபி அணிக்காக கடந்த சீசனில் அறிமுகமான அவர் 15 போட்டிகளில் 513 ரன்களை குவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி ஆறு அரைசதம் அடித்து அந்த அணிக்காக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

maxwell

இதன் காரணமாக அவர் ஆர்.சி.பி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் கோலியும் மேக்ஸ்வெல்லை-தான் கேப்டனாக மாற்ற ஆதரிப்பார். ஏனெனில் ஏற்கனவே பிக்பாஷ் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக கேப்டனாக மேக்ஸ்வெல் செயல்பட்டுள்ளார். அந்த அணியை சிறப்பாகவும் வழி நடத்தியுள்ளார். இதன் காரணமாக நிச்சயம் பெங்களூர் அணியின் கேப்டனாக மேக்ஸ்வெல்-க்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : அடிச்சி சொல்றேன். இவர் வர ஏலத்துல 16 கோடிக்கு மேல ஏலம் போவாரு – ராபின் உத்தப்பா உறுதி

ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களில் ஒருவரைத்தான் கேப்டனாக நியமிக்க முயற்சி செய்யும். அந்த வகையில் கோலி, சிராஜ் ஆகிய இருவரையும் தவிர மேக்ஸ்வெல் மட்டுமே பெங்களூரு அணியால் தக்க வைக்கப்பட்டதால் அவரே கேப்டனாக மாறுவார் என வெட்டோரி கூறியுள்ளார். உங்களைப் பொறுத்தவரை பெங்களூர் அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் உங்களது கருத்தினை பதிவிடலாம் நண்பர்களே.

Advertisement