- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐ.சி.சி தொடர்களில் எந்தவொரு வீரரும் செய்யாத சாதனையை செய்து அசத்திய விராட் கோலி – விவரம் இதோ

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மிக முக்கிய ஆட்டமாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று துபாய் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

ஐ.சி.சி தொடர்களில் அசத்தும் விராட் கோலி :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் குவித்தது. பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 42.3 ஓவர்களிலேயே 244 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது இந்திய அணியின் சார்பாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரரான விராட் கோலி 11 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் காரணமாக அவருக்கு போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவர் பெற்ற இந்த ஆட்டநாயகன் விருதின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு வீரரும் ஐசிசி தொடரில் நிகழ்த்தாத சாதனை ஒன்றினை விராட் கோலி நிகழ்த்தியுள்ளார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் விராட் கோலி படைத்த சாதனை யாதெனில் : இதுவரை ஐசிசி நடத்திய தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மட்டும் ஐந்து முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். அவரை தவிர்த்து வேறு எந்த ஒரு வீரரும் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக மூன்று முறைக்கு மேல் ஐசிசி தொடர்களில் ஆட்டநாயகன் விருதினை வென்றதில்லை.

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கெதிராக கெத்து காட்டிய ஹார்டிக் பாண்டியா.. சர்வதேச கிரிக்கெட்டில் – நிகழ்த்திய அசத்தல் சாதனை

எப்பொழுதுமே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி என்றாலே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலி நேற்றைய போட்டியிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -