மேக்ஸ்வெலை விட டேஞ்சர்.. அதை செஞ்சுட்டு வரும் விராட் கோலி கையில் தான் இருக்கு.. முகமது கைப்

Mohammed Kaif 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மார்ச் 22ஆம் தேதி சேர்ந்து உள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர்கொள்கிறது. கடந்த 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்டது முதல் கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வரும் பெங்களூரு இம்முறையாவது சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் இருக்கிறது.

அந்த சூழ்நிலையில் 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக காயத்தை சந்தித்தாலும் ஒற்றைக் காலில் இரட்டை சதத்தை அடித்து நொறுக்கிய கிளன் மேக்ஸ்வெல் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதே போல மும்பையிடமிருந்து வாங்கப்பட்ட மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் சமீபத்திய நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சதமடித்து அகத்தி வருகிறார்.

- Advertisement -

விராட் கோலி ஃபார்ம்:
எனவே இம்முறையும் கிளன் மேக்ஸ்வெல் எதிரணிகளுக்கு ஆபத்தாக விளையாடக்கூடிய பெங்களூரு வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் என்ன தான் மேக்ஸ்வெல், க்ரீன் ஆகியோரை விட விராட் கோலி தான் பெங்களூரு அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தீர்மானிக்கப் போகும் உண்மையான ஆபத்தான பேட்ஸ்மேன் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தைப் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“விராட் கோலி கடந்த 1 – 2 வருடமாக அற்புதமான கிரிகெட்டை விளையாடி வருகிறார். அவருடைய ஃபார்ம் நன்றாக உள்ளது. குறிப்பாக ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதமடித்ததில் இருந்து அவர் திரும்பி பார்க்கவில்லை. அப்போதிலிருந்து அபாரமாக விளையாடும் விராட் கோலி போன்றவருக்கு நல்ல ஃபார்மில் இருக்கும் போது ஒவ்வொரு போட்டியிலும் எப்படி ரன்கள் குவிக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும்”

- Advertisement -

“அத்துடன் அவர் 2023 உலகக் கோப்பையில் தொடர் நாயகன். எனவே இதே ஃபார்மை அவர் தொடர்வார் என்று நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் இடைவெளி எடுத்து வரும் போது மிகச் சிறப்பாக விளையாடுவார் என்பதே விராட் கோலியின் ஸ்பெஷலாகும். இங்கே பல வீரர்கள் ஃபார்மை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து விளையாடுவார்கள். ஆனால் விராட் கோலி ஒவ்வொரு முறையும் இடைவெளி எடுத்து வரும் போது முன்பை விட அதிக ஆபத்தை கொடுக்கும் பேட்ஸ்மேனாக வருகிறார்”

இதையும் படிங்க: துஷார் தேஷ்பாண்டே மாதிரி பிளேயர்ஸ் வெச்சே.. தோனி கோப்பை ஜெயிக்க அது தான் காரணம்.. ஃகைப்

“ஆம் பெங்களூரு அணியில் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் ஆகியோர் உள்ளனர். ஆனால் விராட் கோலியின் ஃபார்ம் தான் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதை தீர்மானிக்கும். எனவே பெங்களூரு பிளே ஆஃப் செல்ல மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் ஆகியோருடன் விராட் கோலி நல்ல ஃபார்மில் இருப்பது அவசியமாகும்” என்று கூறினார்.

Advertisement