- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உலககோப்பையில் விராட் கோலிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால் – பதிலடி கொடுப்பாரா விராட் கோலி

இன்னும் சில தினங்களில் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது துவங்க இருக்கும் வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் 20 அணிகளில் இந்திய அணிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவரை இந்திய அணி எந்த ஒரு ஐசிசி தொடரையும் வென்றதில்லை. எனவே இந்த தொடர் மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் டி20 வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை 2007-ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் கைப்பற்றிய இந்திய அணியானது அதன் பின்னர் தொடர்ச்சியாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இந்த சோகமான சாதனையை மாற்றுவதற்கான அருமையான வாய்ப்பு தற்போது இந்திய அணிக்கு கிடைத்துள்ள காரணத்தினால் தற்போது இந்திய அணியின் வீரர்கள் மிகவும் உத்வேகத்துடன் இந்த தொடரை எதிர்கொள்ள காத்திருக்கின்றனர்.

- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே நியூயார்க் நகருக்கு சென்று பயிற்சிக்கு தயாராகி வரும் வேளையில் இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சமீப காலமாகவே விராட் கோலிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் போதாத காலமாக இருந்து வந்தது.

ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வந்தாலும் டி20 கிரிக்கெட்டில் அவரது ஸ்ட்ரைக் ரேட் மீது தொடர்ச்சியான விமர்சனங்கள் இருந்து வருகின்றன. ஆனாலும் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் விராட் கோலி அற்புதமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்திருந்தார்.

- Advertisement -

அதோடு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் அவர் சாதனையை நிகழ்த்தியிருந்தார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை துவக்க வீரராக களமிறங்கி சற்று மைதானத்தின் தன்மையை கணித்து அதிரடியாக விளையாடும் விராட் கோலிக்கு டி20 உலக கோப்பையில் மூன்றாவது இடத்தில் கிளமிறங்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதனால் அவர் அந்த இடத்தில் களமிறங்கியதும் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அவங்க இல்லனா ஐ.பி.எல் இவ்ளோ சிறப்பா நடந்தே இருக்காது.. பாராட்டி பரிசுத்தொகையை அறிவித்த ஜெய் ஷா

மேலும் விராட் கோலி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விராட் கோலி போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் இந்த சவாலை எதிர்கொண்டு நிச்சயம் தன்மீது விமர்சனம் வைத்தவர்களுக்கு இந்த தொடரின் மூலம் பதிலடி கொடுப்பார் என்று நம்பலாம்.

- Advertisement -