உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இரண்டு மாதங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி மே-26 ஆம் தேதி கோலாகலமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நிறைவு பெற்றது. இந்த தொடருக்கான இறுதிப் போட்டியில் பி.சி.சி.ஐ சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நேரில் போட்டியை கண்டு ரசித்தனர்.
இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிய வேளையில் அந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா அணியானது மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் அந்த போட்டி முடிந்து இந்த தொடரில் பங்கேற்று விளையாடிய கிரிக்கெட் வீரர்களை பாராட்டி ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக விளையாடிய வீரர்களை வாழ்த்தி பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
அந்தவகையில் கிரிக்கெட் வீரர்களை தாண்டி இந்த ஐபிஎல் தொடர் முழுவதுமாக நடைபெற முக்கிய காரணமாக இருந்த மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆகியோருக்கும் தற்போது பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய் ஷா பரிசு தொகையை அறிவித்துள்ளார்.
அதன்படி ஐபிஎல் போட்டியை நடத்திய மைதானத்தின் பராமரிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அதிகபட்சம் 25 லட்ச ரூபாய் வரை பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். சமீபத்திய டி20 கிரிக்கெட்டில் உண்மையான கதாநாயகர்கள் மைதான பராமரிப்பார்கள் தான். ஏனெனில் அவர்களே சரியான நேரத்தில் பிட்ச்களை பராமரித்து நல்ல போட்டிகளை நடைபெற உறுதுணையாக இருக்கின்றனர்.
இதையும் படிங்க : வெறும் 2 நாள் தான்.. உங்க 2 பேருக்கும் இதான் வாழ்நாளின் கடைசி சான்ஸ்.. விராட், ரோஹித்தை எச்சரித்த கைப்
எனவே அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 மைதானங்களின் பராமரிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கும் 25 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை ஜெய் ஷா அறிவித்துள்ளார். அதேபோன்று மூன்று மைதானங்களின் ஊழியர்களுக்கு 10 லட்சமும் வழங்கப்படும் என்றும் ஜெய் ஷா அவரது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



