
நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மே 28ஆம் தேதியான இன்று துவங்கியது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்துள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் இஷான் கிஷன் 80 ரன்களையும், அனிகேத் வர்மா 43 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஆர்.சி.பி அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடி வருவதன் மூலம் ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஒரு மாபெரும் வரலாற்று சாதனையை ஐபிஎல் போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார்.
அதுகுறித்த விவரம் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் விராட் கோலி நிகழ்த்திய சாதனை யாதெனில் : அதாவது இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பித்த 2008-ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வரும் விராட் கோலி தொடர்ச்சியாக 19 ஆண்டுகள் விளையாடிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : இந்த விடயத்தில் தோனியின் தலையீடு கொஞ்சமும் இல்லை.. எங்களது முடிவு தான் – ருதுராஜ் கெய்க்வாட் கருத்து
அதுமட்டும் இன்றி இந்த 19 ஆண்டுகளும் ஒரே அணிக்காக விளையாடிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலகில் வேறு எந்த வீரரும் செய்யாத ஒரு சாதனையை விராட் கோலி இன்றைய போட்டியில் விளையாடியதன் மூலம் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.