கிரிக்கெட் போட்டிகளில் எனக்கு பிடித்த பார்மேட் இதுதான். அதில் விளையாடுவது மனதுக்கு நிறைவாக இருக்கு – கோலி நெகிழ்ச்சி

- Advertisement -

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக எந்த ஒரு விளையாட்டுப் போட்டியும் நடைபெற வில்லை. குறிப்பாக மார்ச் மாதம் இறுதியில் துவங்க இருந்த மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரும் இதுவரை துவங்காததால் வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர்.

Kohli

- Advertisement -

இந்நிலையில் தற்போது வீட்டில் இருக்கும் வீரர்கள் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடுவது மட்டுமின்றி கிரிக்கெட் குறித்த தங்களது கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் நேரில் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் தனக்கு பிடித்த விடயம் குறித்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது போன்ற மனதிற்கு நெருக்கமான ஒன்று எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதை தனக்கு கிடைத்த பாக்கியமாக கூறியுள்ளார். டெஸ்ட் விளையாட்டின் மட்டுமே வீரரின் உண்மையான திறமை வெளிப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Kohli

ஏற்கனவே கோலி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான விவியன் ரிச்சர்ட்ஸ் உடன் பல விஷயங்களில் ஒத்திருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி நம்பர் ஒன் வீரராக அவர் திகழுவும் இதுவே காரணம் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இதே கருத்தினை இந்தியாவின் முன்னாள் வீரர்களான குண்டப்பா விஸ்வநாத் மற்றும் வி.வி.எஸ் லட்சுமணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். தற்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் கோலி இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்திலும் உள்ளனர். விரைவில் மீண்டும் கோலி முதலிடத்திற்கு முன்னேறவும் வாய்ப்புள்ளது.

Kohli-3

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7240 ரன்களை குவித்துள்ளார். இதில் 27 சதங்களும் 22 அரை சதங்களும் அடங்கும். அதேபோல 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11867 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement