டீ20 போட்டியில் வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி..!

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் கோலி சர்வேதேச டி20 தொடரில் 2000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
koli
நேற்று (ஜூலை 3) மாஞ்சிஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராட்போர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 வர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 69 ரன்களை எடுத்திருந்தார்.

பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இந்திய அணியின் ஷிகர் தவான் 4 ரன்களுக்கும், ரோஹித் ஷர்மா 32 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 101 ரன்களை குவித்தார். அவருடன் கை கோர்த்த கோலி 22 பந்துகளில் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
kolhi
இந்த போட்டியில் கோலி 8 ரன்களை கடந்த போது டி20 வரலாற்றில் 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார் கோலி. ஆனால், இந்த போட்டியில் ரோஹித் சர்மா 51 ரன்களை எடுத்திருந்தால், இந்த சாதனை பட்டியலில் முதல் ஆளாக அவர் இடம்பிடித்திருப்பார். ஆனால், அவர் வெறும் 19 ரன்களில் இந்த சாதனையை தவிர விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.