கோலியை காதலித்த பெண்ணால் அனுஷ்கா சர்மாவுக்கு ஆபத்தா! எச்சரிக்கும் ரசிகர்கள்…ஏன் தெரியுமா ?

sharma
- Advertisement -

விராட்கோலியை நீண்டகாலமாக காதலித்து வந்தவர் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீரர் டேனியல்லி வாய்ட். இவர் கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 56பந்துகளில் சதமடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.
virat

விராட்கோலியின் ஆட்டத்தில் மயங்கிய டேனியல்லி வாய்ட் ஒருநாள் டிவிட்டரில் விராட்கோலியிடம் “என்னை திருமணம் கொள்கின்றீர்களா” என்று கேட்டு தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.அப்போது அந்த டிவீட் காட்டுத்தீயை விடவும் வேகமாக பரவியது.இதன்பின்னர் விராட்கோலி டேனியல்லி வாய்ட்டிற்கு சில அறிவுரைகளை கூறி தான் ஆடிவந்த ஒருபேட்டையும் பரிசளித்தார்.

- Advertisement -

இதன்பின்னர் விராட்கோலி–அனுஷ்கா சர்மாவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.விராட்கோலியின் திருமணத்திற்கு பின்னர் விராட்கோலியை காதலித்த டேனியல்லி வியாட் விரைவில் தொடங்கவிருக்கும் இந்தியா-இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கான டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்தியாவிற்கு வந்துள்ளார்.
Danielle

இந்நிலையில் நேற்று மும்பையில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டார். இவரது டிவீட்டிற்கு விராட் கோலியின் ரசிகர் ஒருவர் ”நீங்கள் இப்போது விராட் கோஹ்லி வீட்டில் இருந்து 12 கிமீ தொலைவில்தான் இருக்கின்றீர்கள்” என்று கூகுள் மேப் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார்.

மற்றொரு ரசிகரோ அனுஷ்கா சர்மா கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும். விராட்கோலியை காதலித்த டேனியல்லி வியாட் உங்களுக்கு மிக அருகில் வந்துள்ளார் என்று அனுஷ்கா சர்மாவை எச்சரித்து டிவீட் செய்துள்ளார்.

Advertisement