17 வருஷமா ஒரே டீமுக்காக ஆடுற இந்த மனுஷனுக்கா இந்த நிலைமை? – கிங் கோலி சந்தித்த மோசமான சாதனை

Kohli
- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் தற்போது 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது ஐபிஎல் சீசனானது கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருவதால் இம்முறை கோப்பையை கைப்பற்றப்போவது யார்? என்ற ஆவலும் எழுந்துள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர், ஒரே சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர் என பல்வேறு சாதனைகளை படைத்திருக்கும் விராட் கோலிக்கு நேற்றைய போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் ஒரு மோசமான சாதனையையும் கிடைத்துள்ளது.

- Advertisement -

ஆர்.சி.பி அணிக்காக கடந்த 17 ஆண்டுகளாக விளையாடி வரும் அவர் இன்னும் ஒரு முறை கூட கோப்பையை கையில் ஏந்தியது கிடையாது. எனவே விராட் கோலி இம்முறையாவது கோப்பையை கைகளில் ஏந்த வேண்டும் என்று ஆர்சிபி ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.

இவ்வேளையில் நேற்று பெங்களூரில் நடந்த லக்னோ அணிக்கெதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த ஆர்.சி.பி அணி இந்த தொடரில் தங்களது மூன்றாவது தோல்வியை பதிவு செய்துள்ளது. தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் ஆர்சிபி அணிக்காக அளித்து விளையாடி வரும் விராட் கோலி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வுபெறும் வரை பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடுவேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

- Advertisement -

ஆனால் இப்படி ஆர்.சி.பி அணிக்காக உயிரை கொடுத்து விளையாடி வரும் அவர் தற்போது லக்னோ அணிக்கு எதிராக அடைந்த தோல்வியின் மூலம் மோசமான சாதனையை சந்தித்திருக்கிறார். அந்த சாதனை யாதெனில் : ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் தோல்வியை தழுவிய வீரர் என்ற மோசமான சாதனையை விராட் கோலி சந்தித்திருக்கிறார். இதுவரை விராட் கோலி ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் வேளையில் 241 போட்டியில் பங்கேற்று அதில் 120 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருக்கிறார்.

இதையும் படிங்க : உலகில் வேறுயெந்த வீரரும் படைக்காத இமாலய சாதனையை டி20 கிரிக்கெட்டில் நிகழ்த்தி காட்டிய விராட் கோலி – விவரம் இதோ

அவருக்கு அடுத்தபடியாக பல்வேறு ஐபிஎல் அணிகளில் மாறி மாறி விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் 118 போட்டிகளில் தோல்வி அடையும்போது இடம் பிடித்து விளையாடி இருக்கிறார். மூன்றாவது இடத்தில் ரோகித் சர்மா 112 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருக்கிறார். நான்காவது இடத்தில் ஷிகர் தவான் 107 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருக்கிறார். ஐந்தாவது இடத்தில் ராபின் உத்தப்பா 106 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement