உலகில் வேறுயெந்த வீரரும் படைக்காத இமாலய சாதனையை டி20 கிரிக்கெட்டில் நிகழ்த்தி காட்டிய விராட் கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-ஆம் ஆவது லீக் போட்டியில் விளையாடிய பெங்களூரு அணியானது சொந்த மண்ணில் 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது மூன்றாவது தோல்வியையும் பெற்றுள்ளது. இந்த போட்டியில் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு பெங்களூரு அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அந்த இலக்கினை துரத்திய பெங்களூரு அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 16 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 22 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இருப்பினும் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடியதன் மூலம் டி20 வரலாற்றில் ஒரு இமாலய சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.

- Advertisement -

அதன்படி விராட் கோலி படைத்த சாதனை யாதெனில் : பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கெதிரான போட்டியில் பங்கேற்றதன் மூலம் சின்னசாமி மைதானத்தில் மட்டும் விராட் கோலி 100 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இப்படி ஒரே மைதானத்தில் 100 டி20 போட்டிகளில் எந்த ஒரு வீரரும் பங்கேற்று விளையாடியது கிடையாது.

கடந்த 2008-ஆம் ஆண்டு முதலே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி 17 சீசன்களாக அதே அணியில் விளையாடி வருகிறார். அதோடு அவர்களது சொந்த மைதானமாக சின்னசாமி மைதானமே இருப்பதால் தற்போது அவரால் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்துள்ளது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியும் நீண்ட காலமாக இருந்தாலும் இடையில் சி.எஸ்.கே அணி இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. அதேபோன்று சிஎஸ்கே அணி விளையாடிய சில போட்டிகள் புனே மைதானத்தில் நடைபெற்றது என சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் இந்த சாதனையை தோனியால் செய்ய முடியவில்லை. ஆனால் விராட் கோலி பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் வேளையில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : உம்ரான் மாலிக் மாதிரி இல்ல.. மயங் யாதவ் இந்தயாவுக்கு விளையாடனும்.. காரணம் இதான்.. சேவாக் கருத்து

இதுவரை 100 டி20 போட்டிகளில் சின்னசாமி மைதானத்தில் விளையாடியுள்ள விராட் கோலி 3298 ரன்களை குவித்துள்ளார். அவருக்கு அடுத்ததாக ஒரே மைதானத்தில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரராக ரோஹித் சர்மா இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். மும்பை வான்கடே மைதானத்தில் மட்டும் ரோஹித் சர்மா 80 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement