பாண்டிங்கின் சாதனையை குறிவைக்கும் கோலி. முதல் டெஸ்ட்டில் நிகழ்த்த இருக்கும் சாதனை – விவரம் இதோ ?

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் வரும் 22ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது.

Virat-Kohli

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சிறப்பான சாதனை ஒன்றைப் புரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை கோலி படைப்பாரா என்று பொருத்து இருந்து பார்த்தால் தெரியும். அதாவது விராத் கோலி கேப்டனாக இதுவரை 18 சதங்களை டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங் சாதனையை சமன் செய்ய கோலிக்கு இன்னும் ஒரு சதம் போதும். இதுவரை ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பாண்டிங் 19 செஞ்சுரி அடித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் கோலி ஒருவேளை சதம் அடிக்கும் பட்சத்தில் பாண்டிங்கின் சாதனையை சமன் செய்வார்.

Kohli

உலக அளவில் கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் வைத்துள்ளார். மொத்தம் 25 சதங்களை அவர் கேப்டனாக அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனையும் கோலி முறியடிப்பார் என்று நாம் உறுதியாக நாம் நம்பலாம்.

Advertisement