டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் டாப் ரேங்கில் இருந்தாலும் டி20யில் இந்தியா பின்தங்கி இருக்க இதுவே காரணம் – கோலி வெளியிட்ட ரகசியம்

kohli
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 120 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஒருநாள் தரவரிசையில் 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. அதிலும் ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் சிறிய வித்தியாசமே உள்ளது. வெறும் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

Cup

- Advertisement -

அப்படி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் டாப் ரேங்கில் இருக்கும் இந்திய அணி டி20 போட்டிகளில் மட்டும் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. தற்போது டி20 ரேங்கில் ஐந்தாமிடத்தில் இந்திய அணி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு முன்னதாக பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. இந்நிலையில் டி20 ரேங்கில் இந்திய அணி பின் தங்கி இருப்பதற்கான காரணத்தை கோலி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி கோலி கூறியதாவது : இந்திய அணி தற்போது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி எதிரணியை குறைந்தபட்ச ஸ்கோர்களில் சுருட்டுவதற்கான சோதனையை செய்து வருகிறது. ஏனெனில் இந்திய அணி சேசிங்கில் மட்டுமே எளிதாக வெற்றி பெற்று வருகிறது இதனை மாற்றவே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து எதிரணியை சுருட்டும் பரிசோதனையை செய்து வருகிறது. இதனால் நாங்கள் சில போட்டிகளில் தோல்வி அடைந்தோம்.

Ind

மேலும் இளம் வீரர்கள் பலருக்கு டி20 போட்டியின் மூலம் வாய்ப்பு கொடுக்க முடியும் எனவே இளம் வீரர்களுக்கு போதுமான அளவு வாய்ப்பு கிடைக்கிறது. நாங்கள் இன்னும் பெஸ்ட் 11 பேருடன் டி20 போட்டியில் விளையாடவில்லை. எனவே ரேங்கிங் பற்றி கவலையில்லை ஆனால் வெற்றிக்கான சோதனைகளை செய்து வருவதாலேயே நாங்கள் ரேங்கிங்கில் பின்தங்கியுள்ளோம். தேவையான நேரத்தில் எங்களால் டி20 போட்டியில் சாதிக்க முடியும் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement