இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 50-ஆவது லீக் போட்டியானது இன்று லக்னோ நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத இருக்கின்றன. இந்த தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்ய காத்திருக்கும் விராட் கோலி :
அதேவேளையில் இந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி ஏழு தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு இன்னும் ஒரு படி முன்னேறலாம் என்கிற முனைப்புடன் ஆர்.சி.பி அணி விளையாட காத்திருக்கிறது. அதே வேளையில் இந்த போட்டியில் கவுரவ வெற்றிபெற வேண்டும் என லக்னோ அணியும் விளையாட காத்திருக்கிறது.
இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாட இருக்கும் ஆர்.சி.பி அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான விராட் கோலி ரோஹித் சர்மாவின் மாபெரும் சாதனை ஒன்றினை ஐபிஎல் போட்டிகளில் சமன் செய்ய காத்திருக்கிறார்.
அந்த வகையில் விராட் கோலி சமன் செய்யப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரராக எம்.எஸ் தோனி 278 ஆட்டங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து ரோகித் சர்மா 277 போட்டிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : அவனை பாக்கவே பாவமா இருக்கு.. இப்படியே பண்ணா மைக்கை தூக்கி போட்ருவேன் – ரிக்கி பாண்டிங் ஆவேசம்
இவ்வேளையில் இன்றைய போட்டியில் விராட் கோலி தனது 277வது ஐபிஎல் போட்டியில் விளையாடி ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்வார். இன்னும் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்குமே தோனியின் சாதனையை முறியடிக்க அற்புதமான வாய்ப்பு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



