அவனை பாக்கவே பாவமா இருக்கு.. இப்படியே பண்ணா மைக்கை தூக்கி போட்ருவேன் – ரிக்கி பாண்டிங் ஆவேசம்

Ricky Ponting
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது இறுதிப்போட்டி வரை முன்னேறிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஆர்.சி.பி அணியிடம் தோல்வியை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அதன்பின்னர் தற்போது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் அவர்கள் தொடர்ந்து தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் முதல் இடத்தில் தொடர்ச்சியாக நீடித்து வந்தனர். குறிப்பாக பஞ்சாப் அணி முதலில் விளையாடிய 7 போட்டிகளில் ஆறு வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடித்தது.

களத்தில் கோபத்தை வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங் :

ஆனால் கடைசியாக அவர்கள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து தற்போதைய நிலையில் புள்ளி பட்டியலில் 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளனர். கடந்த மூன்று போட்டிகளாக பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்து வருவது அந்த அணியின் நிர்வாகத்தினர் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பஞ்சாப் அணி தோல்விகளை சந்தித்து வருவதற்கு மிக முக்கியமான காரணமாக அந்த அணியின் வீரர்கள் தொடர்ந்து கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டு வருவதும் காரணமாக பார்க்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போதும் போட்டியின் ஆரம்பத்திலேயே கைக்கு வந்த எளிதான கேட்ச்களை அந்த அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக கோட்டை விட்டனர். குறிப்பாக ஷஷாங்க் சிங் இஷான் கிஷன் கொடுத்த எளிய வாய்ப்பை கோட்டை விட்டார். அதேபோன்று கூப்பர் கோனாலியும் நேற்று ஒரு எளிதான கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இதன் காரணமாகவே சன் ரைசர்ஸ் பெரிய ரன் குவிப்பை வழங்கி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி முதலில் பீல்டிங் செய்து கொண்டிருக்கையில் போட்டியின் இடையே எடுக்கப்பட்ட ஒரு பேட்டியில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கேட்ச் வாய்ப்புகளை அவர்களது வீரர்கள் தவறவிடுவது குறித்து பேசுகையில் கூறியதாவது : உண்மையை சொல்லப்போனால் கேட்ச் விடுவது ஒரு வைரஸ் தொற்று போல தற்போது எங்கள் அணிக்குள் பரவி வருகிறது.

- Advertisement -

இந்த சீசனில் நிறைய கேட்ச் வாய்ப்புகளை நாங்கள் தவறவிட்டிருக்கிறோம். போட்டிக்கு முன்னதாக வீரர்கள் கடினமாக உழைத்தாலும் களத்தில் அதற்கு பலன் கிடைக்காமல் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஷஷாங்க் சிங்கை பார்ப்பதற்கு எனக்கு பாவமாக இருக்கிறது. ஏனெனில் அவன் எங்கே சென்றாலும் பந்து அவனை துரத்திக் கொண்டு செல்கிறது.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் மாபெரும் சாதனையை தகர்த்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி – விவரம் இதோ

அவனும் பந்து வானத்தில் உயரத்திலிருந்து கீழே வரும் வரை ஊர்ந்து கவனிக்கிறான். ஆனால் பந்தை தவறவிட்டு விடுகிறான் என்று பேசிக் கொண்டிருந்தார். மேலும் இன்னும் ஒரு வாய்ப்பை எங்களது வீரர்கள் தவறவிட்டால் நான் மைக்கை எரிந்து விடுவேன் என்று அவர் கூறும் போதே கைக்கு வந்த எளிய கேட்சை லாக்கி பெர்குசன் தவறவிட்டார். அதனால் அதிருப்தி அடைந்த ரிக்கி பாண்டிங் கோபமாக அங்கிருந்து நடந்து சென்று விட்டார்.

Advertisement