சி.எஸ்.கே அணியின் மாபெரும் சாதனையை தகர்த்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி – விவரம் இதோ

SRH vs CSK
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இஷான் கிஷன் தலைமையில் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாடிய சன் ரைசன்ஸ் அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வந்தது. அதன்பின்னர் காயத்திலிருந்து மீண்டு வந்த பேட் கம்மின்ஸ் கடந்த சில போட்டிகளாக அணியில் இணைந்து கேப்டனாக விளையாடி வருகிறார். அவரது தலைமையின் கீழும் தற்போது தொடர்ந்து சன் ரைசர்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது.

சி.எஸ்.கே அணியின் சாதனையை தகர்த்த சன் ரைசர்ஸ் அணி :

அந்த வகையில் நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 33 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஏழாவது வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் தற்போது வரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர்கள் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தினை பிடித்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய பஞ்சாப் அணியானது 20 அவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் மட்டுமே குவித்ததால் 33 இரண்டு வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.

நேற்று அவர்கள் பெற்ற இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் சி.எஸ்.கே அணியின் மாபெரும் சாதனை ஒன்றினையும் தகர்த்துள்ளனர். அந்த வகையில் அவர்கள் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சி.எஸ்.கே அணி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்.சி.பி அணியை தொடர்ச்சியாக எட்டு முறை வீழ்த்தியிருந்தது. இதுவே ஒரு அணி தங்களது சொந்த மண்ணில் எதிரணியை தொடர்ச்சியாக வீழ்த்திய அதிக வெற்றிகளாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : வெளிநாட்டு வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்திய – கூப்பர் கோனாலி

இவ்வேளையில் நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தியதன் மூலம் கடந்து 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது 2026 ஆம் ஆண்டு வரை சொந்த மண்ணில் பஞ்சாப் அணியை தொடர்ச்சியாக ஒன்பது முறை வீழ்த்தி சென்னை அணியின் சாதனையை தகர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement