வெளிநாட்டு வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்திய – கூப்பர் கோனாலி

Cooper Connolly
- Advertisement -

நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்துகையில் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே குவிக்க 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி பஞ்சாப் அணியின் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

கூப்பர் கோனாலி நிகழ்த்திய வரலாற்று சாதனை :

ஏனெனில் இந்த தொடரின் ஆரம்பத்தில் முதல் 6 போட்டியில் பலம் வாய்ந்த அணியாக ஆதிக்கம் செலுத்தி தொடர் வெற்றிகளை பெற்ற பஞ்சாப் அணி பேட்டிங்கில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. ஏற்கனவே கடந்த இரண்டு போட்டிகளாக தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி நிச்சயம் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் நேற்றைய போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்று பஞ்சாப் அணி அடைந்த தோல்வி அவர்களை புள்ளி பட்டியலிலும் முதலாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக பஞ்சாப் அணியின் நிர்வாகமும் சற்று ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. இருந்தாலும் இந்த போட்டியின் போது 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்துகையில் பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க மூன்றாவது வீரராக களமிறங்கிய கூப்பர் கோனாலி 59 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் என 107 ரன்கள் குவித்து சதமடித்து அசத்தியிருந்தார்.

இந்த 2026 ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறார். இவ்வேளையில் நேற்று அவர் அடித்த சதத்தின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை முதல் வெளிநாட்டு வீரராக நிகழ்த்தியுள்ளார். அப்படி அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

ஐ.பி.எல் போட்டிகளில் வெளிநாட்டு வீரராக மிகக் குறைந்த வயதில் சதமடித்த வீரராக குவிண்டன் டி காக் முதலிடத்தில் இருந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணிக்கு எதிராக தனது 23-வது வயது 122-வது நாளில் சதமடித்தார். இதுவே ஐ.பி.எல் வரலாற்றில் வெளிநாட்டு வீரர் ஒருவர் மிகக் குறைந்த வயதில் அடித்த சதமாக இருந்து வந்தது. இவ்வேளையில் இந்த 10 ஆண்டுகால சாதனையை தற்போது கூப்பர் கோனாலி முறையடித்துள்ளார்.

இதையும் படிங்க : 11 க்கு 11 வெற்றி.. பஞ்சாப் அணியை வீழ்த்தி மாபெரும் சாதனையுடன் முதலிடத்திற்கு முன்னேறிய – சன் ரைசர்ஸ் அணி

நேற்று நடைபெற்ற சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் சதமடிக்கும் போது 22 வயது 257 நாட்களாக இருந்தது. இதன் காரணமாக மிகக் குறைந்த வயதில் ஐ.பி.எல் போட்டியில் சதமடித்த வெளிநாட்டு வீரராக தற்போது கூப்பர் கோனாலி தனது பெயரை பதிவு செய்து வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.

Advertisement