இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன் ரைசர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
சாதனையுடன் முதலிடத்தை பிடித்த சன் ரைசர்ஸ் அணி :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை சிதறடித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக அதிகபட்சமாக ஹென்றிச் கிளாஸன் 59 ரன்களையும், இஷான் கிஷன் 55 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது சன் ரைசர்ஸ் அணியின் பந்துவிச்சை ஓரளவு சிறப்பாக எதிர்கொண்டாலும் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக சன் ரைசர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக கூப்பர் கோனாலி 107 ரன்களையும், ஸ்டாய்னிஸ் 28 ரன்களையும் குவித்தனர்.
நேற்றைய இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் சன் ரைசர்ஸ் அணியானது புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே வேளையில் அவர்களிடம் தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி இரண்டாவது இடத்திற்கு சறுக்கியுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணி நிகழ்த்திய ஒரு சாதனை ரசிகர் மத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் சன் ரைசர்ஸ் அணி நிகத்திய சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : போட்டியின் ஆரம்பத்திலேயே இப்படி நடந்தா எப்படி ஜெயிக்க முடியும்? – ஷ்ரேயாஸ் ஐயர் வருத்தம்
இதுவரை சன் ரைசர்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் 220+ டார்கெட்டை 11 முறை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதாவது ஐபிஎல் போட்டிகளில் சன் ரைசர்ஸ் அணி 220 ரன்களுக்கு மேல் அடித்து ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்தித்தது கிடையாது என்ற சாதனையுடன் பஞ்சாப் பணியை வீழ்த்தி இந்த தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



