- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தாதா கங்குலியை தாண்டி தல தோனியை சமன் செய்த கிங் விராட் கோலி – விவரம் இதோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 142 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் முற்றிலுமாக கைப்பற்றி அசத்தியது.

தோனியின் சாதனையை சமன் செய்த விராட் கோலி :

இந்த தொடரின் முதல் போட்டியின் போது காயம் காரணமாக இடம்பெறாத இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இரண்டாவது போட்டியின் போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்தை அளித்திருந்தார். இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த மூன்றாவது போட்டி அவருக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்கள் குவிக்க இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 55 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 52 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சில முக்கிய பிரமாண்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் நேற்று அவர் அடித்த 52 ரன்கள் மூலம் ஆசிய மண்ணில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதற்கு முன்னதாக சங்கக்காரா 410 இன்னிங்ஸ்களில் இந்த சாதனை நிகழ்த்தியிருந்த வேளையில் தற்போது விராட் கோலி 340 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை செய்துள்ளார். அதுமட்டும் இன்றி நேற்றைய போட்டியில் 52 ரன்களை குவித்ததன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக 4000 ரன்களை அடித்த முதல் ஆசிய வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தி இருக்கிறார்.

இதையும் படிங்க : 1 பயிற்சி தானா? காற்றை குறை சொல்லி இந்தியாவை அவமதித்து 3 – 0 என தோற்ற இங்கிலாந்தை.. விளாசிய பீட்டர்சன்

அதோடு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி ஒருநாள் கிரிக்கெட்டில் 72 அரைசதங்களை அடித்திருந்த வேளையில் அவரது சாதனையை கடந்த விராட் கோலி நேற்று 73-வது அரை சதத்தை பதிவு செய்து தோனியின் அரை சதங்களின் எண்ணிக்கையை சமன் செய்தார்.

- Advertisement -