1 பயிற்சி தானா? காற்றை குறை சொல்லி இந்தியாவை அவமதித்து 3 – 0 என தோற்ற இங்கிலாந்தை.. விளாசிய பீட்டர்சன்

Kevin Pieterson
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராக இருக்கிறோம் என்பதை நிரூபித்த இந்தியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதையும் காண்பித்தது. மறுபுறம் 3 – 0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தாலும் சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் திறமை இருப்பதால் கவலையில்லை என்று சொன்ன இங்கிலாந்து கடைசியில் அப்படியே தோற்றது.

இந்நிலையில் இது ஒரு சாதாரண இருதரப்பு தொடர் என்று கருதிய இங்கிலாந்து அணியினர் இத்தொடருக்காக ஒரு முறை மட்டுமே பயிற்சி எடுத்ததாக முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார். அப்படி இந்தியாவையும் இந்திய சூழ்நிலைகளையும் அவமதித்தாலேயே இங்கிலாந்து இப்படி தோற்றதாகவும் பீட்டர்சன் சாடியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பீட்டர்சன் விளாசல்:

“கடந்த வாரம் இந்த வீரர்கள் குறைவாக பயிற்சி எடுத்ததைப் பற்றி நானும் ரவி சாஸ்திரியும் நேரலையில் பேசினோம். நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டிக்கு முன் இங்கிலாந்து அணியினர் ஒரு முறை பயிற்சி எடுத்தார்கள். அதைத் தவிர்த்து அவர்கள் எடுக்கவில்லை. ஜோ ரூட் மட்டுமே ஸ்பெஷல் பயிற்சிகளை எடுத்தார். மன்னிக்கவும் ஆசியக் கண்டத்தில் வெற்றிப் பெற நீங்கள் இப்படி வரக்கூடாது”

“தொடர்ந்து ஒரே தவறை செய்யும் நீங்கள் பயிற்சிக்கும் செல்லக்கூடாது என்ற முடிவை எடுத்துள்ளீர்கள். இந்த உலகில் எந்த ஒரு விளையாட்டு வீரரும் பயிற்சியில்லாமல் விளையாடுவதற்குச் செல்ல முடிவெடுக்க மாட்டார்கள். முதல் ஆட்டத்திற்குப் பின் இங்கிலாந்து பயிற்சி எடுக்கவில்லை என்பதைக் கேள்விப்பட்டு நான் திகைத்துப் போனேன். இந்த வீரர்கள் ஃகோல்ப் விளையாடிக் கொண்டே இங்கிலாந்துக்காக மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்கள்”

- Advertisement -

சம்பளம் எதுக்கு:

“ஆனால் ரன்கள் அடிப்பதற்காக உங்களுக்குப் பணம் தரப்படுகிறது. கிரிக்கெட்டில் வெற்றிப் பெறுவதற்காக உங்களுக்குச் சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஃகோல்ப் விளையாடுவதற்காக அல்ல. இது ஃகோல்ப் சுற்றுப்பயணம் கிடையாது. கிரிக்கெட் சுற்றுப்பயணமாகும். தற்போதைய இங்கிலாந்து அணியில் வெற்றிக்காக எங்களுடைய முழு பங்களிப்பைக் கொடுத்தோம் என்று செல்லக்கூடிய வீரர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்”

இதையும் படிங்க: இதென்ன ஃகோல்ப் டூரா? இந்தியாவை குறைத்து மதிப்பிட்டு தூங்கிய இங்கிலாந்தை கலாய்த்த சாஸ்திரி, பீட்டர்சன்

“வேண்டுமானால் ஜோ ரூட் இருக்கக்கூடும். ஆனால் மற்ற வீரர்கள் அப்படி இல்லாதது எனக்குச் சோகத்தைக் கொடுக்கிறது. ஹரி ப்ரூக் கொல்கத்தாவில் காற்று சுத்தமாக இல்லாததே தம்முடைய விக்கெட் பறிபோக காரணம் என்று சொன்னார். உண்மையில் அப்படி இல்லை. நீங்கள் இந்தியாவையும் இந்திய சூழ்நிலைகளையும் அதிகமாக அவமதித்து விட்டீர்கள். இங்கிலாந்து அணியின் கண்ணோட்டத்தில் இருந்து நீங்கள் அப்படி செய்ததைப் பார்ப்பது எனக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது” என்று கூறினார்.

Advertisement