இதென்ன ஃகோல்ப் டூரா? இந்தியாவை குறைத்து மதிப்பிட்டு தூங்கிய இங்கிலாந்தை கலாய்த்த சாஸ்திரி, பீட்டர்சன்

Ravi Shastri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய டி20 தொடரை சூரியகுமார் தலைமையில் 4 – 1 (5) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து இந்தியா வென்றது. அதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராக இருக்கிறோம் என்பதை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி காண்பித்துள்ளது.

மறுபுறம் 3 – 0 என்ற கணக்கில் தோற்றாலும் பரவாயில்லை. ஏனெனில் சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் இந்தியாவுக்கு எதிராக வெல்லும் திறமையை கொண்டிருப்பதால் கவலைப்பட மாட்டோம் என்று இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் தெரிவித்தார். கடைசியில் அவர் விருப்பப்பட்டது போலவே இந்திய அணி இங்கிலாந்துக்கு ஒயிட்வாஸ் தோல்வியை பார்சல் கட்டி அனுப்பியது.

- Advertisement -

பீட்டர்சன் விமர்சனம்:

முன்னதாக இந்தத் தொடரில் பஸ்பால் அணுகுமுறையைப் பின்பற்றி இந்தியாவை எளிதாக வீழ்த்தி விடலாம் என்று நினைத்த இங்கிலாந்து ஒருமுறை மட்டுமே பயிற்சி எடுத்ததாக ரவி சாஸ்திரி தெரிவித்தார். இது பற்றி அவர் நேரலையில் பேசியது பின்வருமாறு. “இந்த மொத்த சுற்றுப்பயணத்திலும் இங்கிலாந்து வெறும் ஒரு முறை மட்டுமே வலைப் பயிற்சியை எடுத்துக் கொண்டதாக நான் கேள்விப்பட்டேன்”

“ஆனால் நீங்கள் கடினமானப் போட்டிகளுக்குப் பயிற்சியை எடுக்கவில்லையெனில் எந்த வகையிலும் முன்னேற்றத்தையும் சந்திக்க மாட்டீர்கள்” என்று கூறினார். அப்போது கடைசிப் போட்டியில் காயமடைந்த ஜேக்கப் பேத்தலுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்ட டாம் பான்டன் கிரிக்கெட் பயிற்சி எடுப்பதற்கு பதிலாக ஃகோல்ப் பயிற்சி எடுத்ததாக முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விமர்சனமாக பேசினார்.

- Advertisement -

தூங்கிய ஆர்ச்சர்:

இது பற்றி அவர் நேரலையில் பேசியது பின்வருமாறு. “துபாயிலிருந்து இங்கே வருவதற்கு 2 மணி நேரம் தேவைப்படும். அதைக் கடந்து இங்கே வந்த டாம் பான்டன் நேற்று ஃகோல்ப் விளையாடிக் கொண்டிருந்தார். இங்கிலாந்து அணியில் பிரச்சனை எப்படி துவங்குகிறது? 60/1, 80/2 என்ற நல்ல துவக்கத்தைப் பெற்ற அவர்களுக்கு மிடில் ஆர்டரில் எந்த பேட்ஸ்மேனும் ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்ளவில்லை”

இதையும் படிங்க: 91/3 டூ 355/4.. தெ.ஆ’விடம் கைமீறிய வெற்றியை பறித்த பாகிஸ்தான் சாதனை வெற்றி.. முத்தரப்பு ஃபைனலுக்கு தகுதி

“இப்படி இருந்தால் எப்படி முன்னேற முடியும்” என்று விமர்சித்தார். அப்படி பீட்டர்சன் விமர்சித்த போது கேமராமேன் கேமராவை இங்கிலாந்து அணியின் பக்கம் திருப்பினார். அங்கே ஜோப்ரா ஆர்ச்சர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்த ரவி சாஸ்திரி. “நான் சொன்ன கேள்வி இங்கே தெரிகிறது பாருங்கள். தூங்குவதற்கு இது நல்ல நேரம். இங்கிலாந்துக்கு இப்படித்தான் இந்தச் சுற்றுப்பயணம் அமைந்தது” என்று சொல்லி கலாய்த்தார்.

Advertisement