டெஸ்ட் கிரிக்கெட்டில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்த கேப்டன் விராட் கோலி – விவரம் இதோ

Gavaskar-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி தற்போது ஏஜஸ் பவுல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டி மழையால் முழுவதும் பாதிக்கப்பட இரண்டாவது நாளில் தான் இந்த போட்டி ஆரம்பித்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி களமிறங்கியது. ரோகித் மற்றும் கில் ஆகியோர் சிறப்பான அடித்தளத்தை அமைக்க அதன்பின்னர் புஜாரா விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

wtc ind

- Advertisement -

பின்னர் மிடில் ஆர்டரில் ஒன்றிணைந்த ரஹானே மற்றும் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேலும் விக்கெட்டுக்களை விழாமல் பார்த்துக் கொண்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 44 ரன்களுடன் இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று மேலும் ரன் குவிப்பில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு பிறகு சதம் அடிக்கவில்லை என்பதால் நிச்சயம் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர துவக்கத்திலேயே மேலும் ரன் சேர்க்காமல் கோலி 44 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Jamieson 1

சதம் அடிக்காமல் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் கோலி விளையாடி வந்தாலும் அவர் சாதனைகளை கடப்பதில் பஞ்சமில்லை அந்த வகையில் தற்போது இந்த போட்டியில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 7500 ரன்களை எட்டி சாதனை படைத்துள்ளார். 154வது இன்னிங்சில் 7500 ரன்களை கடந்த கோலி கவாஸ்கருடன் அந்த சாதனையை பகிர்ந்துகொள்கிறார். கவாஸ்கரும் 154வது டெஸ்ட் இன்னிங்சில் 7500 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.

kohli 1

இந்த பட்டியலில் இந்திய அணி சார்பாக சச்சின் டெண்டுல்கர் 144வது இன்னிங்சில் இதனை செய்து முதலிடத்தில் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்த சாதனையை செய்த இடத்தில் கோலி ஒன்பதாவது வீரராகவும், இந்திய அளவில் நான்காவது வீரராகவும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். தற்போது மூன்றாம் நாளில் முதல் இன்னிங்சை முடித்துள்ள இந்திய அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement