- Advertisement -
உலக கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான சொதப்பல்.. 10 ஆண்டுகளுக்கு பிறகு மோசமான சரிவை சந்தித்த – விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி தற்போது தனது கரியரின் இக்கட்டான கட்டத்தில் சிக்கியுள்ளார் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் தற்போது 36 வயதாகும் விராட் கோலி ஏற்கனவே அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

மிகப்பெரிய சரிவை சந்தித்த விராட் கோலி :

அதன் காரணமாக இனி அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்திய அணியில் நீடிக்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது மோசமான ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியில் அவரது இடத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இந்த தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடிய விராட் கோலி ஒரு அரை சதத்துடன் 93 ரன்களை மட்டுமே சேர்த்ததார் என்பதாலும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் தடுமாற்றத்தை சந்தித்து வருவதாலும் அவருடைய இடம் தற்போது அபாயகரமான நிலையில் உள்ளது.

எதிர்வரும் ஆஸ்திரேலியா தொடரில் விராட் கோலி ரன் குவிக்க தவறினால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மோசமான சரிவை சந்தித்துள்ளார்.

- Advertisement -

அதாவது ஐசிசி வெளியிட்டுள்ள பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் விராட் கோலி இந்த நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக 14-வது இடத்தில் இருந்தார். ஆனால் தற்போது இந்த தொடர் முடிவடைந்த பிறகு அவர் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதன் மூலம் கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு 10 ஆண்டுகளில் தற்போது தான் விராட் கோலி ஐ.சி.சி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 20 இடங்களுக்கு கீழ் சென்றிருக்கிறார்.

இதையும் படிங்க : நியூசிலாந்துக்கு எதிரா மிஸ் ஆயிடுச்சி.. ஆனா ஆஸ்திரேலியாவில் ரோஹித் சும்மா இருக்க மாட்டாரு – ஷிகர் தவான் ஆதரவு

இந்த விடயம் விராட் கோலியின் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில் முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நான்காவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -