அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்த இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துவிட்டது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வி இந்திய அணியின் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ள வேளையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.
ரோஹித் சர்மா நிச்சயம் மீண்டு வருவார் :
ஏனெனில் இந்த தொடரின் மூன்று அல்லது நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால் இந்த தொடர் இந்திய அணிக்கு வாழ்வா சாவா தொடராக மாறியுள்ளது. எதிர்வரும் நவம்பர் 22 ஆம் தேதி பெர்த் நகரில் துவங்கவுள்ள இந்த தொடரானது அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில் ரோகித் சர்மா இந்து தொடரின் முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா ஆஸ்திரேலியா தொடரில் எவ்வாறு செயல்பட போகிறார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. அதேவேளையில் ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் சர்மா சொதப்பும் பட்சத்தில் அவரை இந்திய அணி நிர்வாகம் கழட்டிவிடவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் போன்று இல்லாமல் ஆஸ்திரேலியாவில் ரோகித் சர்மா அசத்துவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய மண்ணில் மூன்றாவது முறையாக இந்திய அணி வெல்லும் வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். ஏனெனில் கடந்த இரண்டு முறையும் இந்திய அணி அங்கு மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது.
எனவே அதே மனநிலையுடன் இம்முறையும் நாம் அங்கு வெற்றி பெறும் நம்பிக்கை எனக்கு உள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் ஆஸ்திரேலியா மைதானங்களில் அதிகளவு விளையாடியிருக்கிறார்கள். எனவே அவர்களது அனுபவம் நிச்சயம் இளம் வீரர்களுக்கு கைகொடுக்கும். ஆஸ்திரேலியா மைதானங்கள் வேகப்பந்து வீச்சைக்கு சாதகமாக இருக்கும் என்றாலும் அதனை எதிர்கொள்ளும் முனைப்புடன் நிச்சயம் நமது வீரர்கள் தயாராவார்கள் என்று நம்புகிறேன்.
இதையும் படிங்க : விஐபின்னு நினைக்காம 2021இல் ரிஷப் பண்ட் செஞ்சதை ஃபாலோ பண்ணுங்க.. கோலி, ரோஹித்துக்கு கைப் அட்வைஸ்
அதேபோன்று 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் இந்திய அணி வெல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் தற்போதைய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் ஆகியோர் சரியான கலவையில் உள்ளதால் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையும் இந்தியா கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



