இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று ஆகஸ்ட் 1-ஆம் தேதி டிரினிடாட் நகரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் யாதெனில் : கடந்த இரண்டாவது போட்டி பார்படாஸ் நகரில் நடைபெற்று முடிந்த பிறகு அங்கிருந்து டிரினிடாட்-க்கு புறப்பட்ட இந்திய அணியுடன் விராட் கோலி விமானம் ஏறவில்லை என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் விராட் கோலி இதுவரை டிரினிடாட் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. அதோடு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான டுவைன் பிராவோ இந்திய அணி வீரர்களை சந்தித்தபோது கூட அங்கு விராட் கோலி காணப்படவில்லை. எனவே விராட் கோலி மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே பேட்டிங் செய்ய களமிறங்காத விராட் கோலி இரண்டாவது போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்ட வேளையில் மூன்றாவது போட்டியிலும் அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. அதனாலே அவர் இந்திய வீரர்களுடன் பயணிக்காமல் அங்கேயே இருந்து விட்டார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : வீடியோ : சூப்பர் ஓவர் போட்டி நடந்த மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு, சரியான சிக்னல் கொடுத்த ஷாகிப் – வங்கதேசத்தை கலாய்த்த டிகே
அதோடு இந்த போட்டியில் தான் களமிறங்கி விளையாடுவதை விட வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சன் மற்றும் சூரியகுமார் யாதவ் போன்றோர் அணியில் விளையாடட்டும் என்பதற்காகவும் கோலி இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.