வீடியோ : என்னோட வெற்றிக்கு காரணமே இந்த 3 பேர் தான் – பாராட்டிய கிங் கோலி, நெகிழ்ந்த துணை பயிற்சியாளர்கள்

Virat Kohli Throw Down Specialists
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வந்த ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தையும் வெற்றியுடன் துவக்கியுள்ளது. குறிப்பாக ஜனவரி 15ஆம் தேதியன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் 317 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணி மற்றும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி ஆகிய இரட்டை உலக சாதனைகளை படைத்தது.

இத்தனைக்கும் பவுலிங்க்கு சாதகமாக இருந்த திருவனந்தபுரம் பிட்ச்சில் டாஸ் வென்று பகல் நேரத்திலேயே எந்த இடத்திலும் சுணங்காமல் கடைசி வரை அதிரடியாக விளையாடிய இந்தியா 50 ஓவரில் 390/5 ரன்கள் குவித்து அசத்தியது. ஆனால் அதே பிட்ச்சில் 100 ரன்களை கூட தாண்ட முடியாத அளவுக்கு இந்தியாவின் தரமான பந்து வீச்சில் வெறும் 22 ஓவர்களில் 73 ரன்களுக்கு சுருண்ட இலங்கை பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

வெற்றிக்கு காரணமானவர்கள்:
அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தாலும் பேட்டிங்கில் 166* ரன்களை அதிரடியாக குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் அபார பினிஷிங் கொடுத்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதே போல் 390 ரன்கள் குவிப்பதற்கு ஆரம்பத்திலேயே சதமடித்து 116 ரன்கள் குவித்த தொடக்க வீரர் சுப்மன் கில்லும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

அதன் காரணமாக போட்டி முடிந்த பின் அந்த இருவரும் பிசிசிஐ சார்பில் எடுக்கப்பட்ட பிரத்தியேக பேட்டியில் கலந்து கொண்டு போட்டியில் நடந்த சுவாரசியமான தருணங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது ராகுல் டிராவிட், விக்ரம் ரத்தோர் ஆகிய முதன்மைப் பயிற்சியாளர்களை தாண்டி வலைப்பயிற்சியின் போது அனைத்து நேரமும் 145, 150 கி.மீ வேகத்தில் பந்தை எரிந்து எரிந்து முக்கிய பயிற்சிகளை வழங்கும் ராகவேந்திரா, தயாந்த் கரானி மற்றும் நுவான் செனெவிரத்னே ஆகிய 3 துணை பயிற்சியாளர்களை விராட் கோலி அருகில் அழைத்து ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி மனதார பாராட்டினார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இவர்கள் தான் ரகு, தயா, நுவான். இவர்கள் தான் தினமும் வலைப்பயிற்சியின் போது எங்களுக்கு 145, 150 கி.மீ வேகத்திலான பந்துகளை கையாலேயே எரிந்து மிகப்பெரிய சவாலை கொடுப்பார்கள். அவர்கள் தான் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் எங்களுக்கு தீவிர பயிற்சிகளை கொடுத்து எங்களை தயாராகுவார்கள். அந்த வகையில் அவர்கள் தான் எங்களது வெற்றிக்கு பின்னால் மிகப்பெரிய வேலை செய்கிறார்கள். எனவே அவர்களின் முகம் மற்றும் பெயர்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன். மிகவும் நன்றி, கைஸ்”

“உண்மையை சொல்ல வேண்டுமெனில் அவர்கள் எங்களுக்கு தினம்தோறும் உலக தரமான பயிற்சிகளை கொடுத்து வலை பயிற்சியில் சவாலை கொடுக்கிறார்கள். எனவே எங்களது வெற்றியின் பாராட்டுக்கள் இவர்களையும் சேரும். இந்திய அணியில் இவர்களுடைய பங்களிப்பு மிகவும் நம்ப முடியாததாகும். குறிப்பாக நாங்கள் 140 – 150 கி.மீ வேகப்பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் சொன்னால் உடனடியாக அவர்கள் எங்களை பயிற்சி களத்திற்கு அழைத்துச் சென்று சோதிப்பார்கள். பலமுறை எங்களை அவர்கள் அவுட்டும் செய்துள்ளார்கள்”

இதையும் படிங்க:என்ன நம்ப வச்சி ஏமாத்திட்டாங்க. தேர்வுக்குழு செய்த காரியத்தை அம்பலமாக்கிய – சர்ஃபராஸ் கான்

“உண்மைய சொல்ல வேண்டுமெனில் எனது கேரியரில் இவர்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துபவர்களாக உள்ளனர். குறிப்பாக இன்று நான் இந்தளவுக்கு வளர்ந்ததற்கான பாராட்டுக்கள் இவர்களையும் சேரும். ஏனெனில் அவர்கள் தான் எங்களுக்கு தினமும் பயிற்சி கொடுக்கிறார்கள். என்னை போலவே சுப்மன் கில்லும் இதேயே உணர்வார் என்று நம்புகிறேன். எனவே எங்களுடைய வெற்றியின் பின்புலத்தில் இருக்கும் இவர்களது பெயர்கள் மற்றும் முகங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று மனதார பாராட்டினார். அவரது அந்த வார்த்தைகளைக் கேட்டு அந்த பயிற்சியாளர்கள் நெகிழ்ந்தது போலவே இந்திய ரசிகர்களும் நெகிழ்ச்சி அடைகிறார்கள்.

Advertisement