- Advertisement -
உலக கிரிக்கெட்

Virat Kohli : அசாருதீன் சாதனையை அசால்ட்டாக சமன் செய்த கிங் கோலி – விவரம் இதோ

உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக கோலி 67 ரன்களும், ஜாதவ் 52 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இறுதி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் கோலி நேற்று 67 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடைசியாக நடந்த மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்து அவர் முன்னால் இந்திய அணியின் கேப்டன் அசாருதீன் சாதனையை சமன் செய்துள்ளார். அடுத்ததாக வரும் 27ஆம் தேதி விண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் மற்றும் ஒரு அரைசதம் அடித்தால் உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக நான்கு அரை சதங்கள் அடித்த இந்திய அணியின் கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் இதுவரை சதமடிக்காத கோலி அடுத்த போட்டியில் சதம் அடிப்பார் என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by