- Advertisement -
ஐ.பி.எல்

ரோஹித் சர்மாவை வேண்டுமென்றே இம்பேக்ட் பிளேயராக களம் இறக்கினாரா ஹார்டிக் பாண்டியா? – பியூஷ் சாவ்லா தகவல்

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணியானது 24 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தோல்வியை பரிசளித்தது.

மேலும் 12 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடே மைதானத்தில் கொல்கத்தா அணி வெற்றியையும் ருசித்து இருந்தது. இந்நிலையில் அந்த போட்டியின் போது 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்துகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக இம்பேக்ட் பிளேயராக துவக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்கினார்.

- Advertisement -

ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடர் குறித்து பேசியிருந்த ரோஹித் சர்மா : இம்பேக்ட் விதிமுறைகளால் டி20 கிரிக்கெட்டிற்கு தான் பாதிப்பு என்பதனால் அதனை நீக்க வேண்டும் என்று பேசியிருந்த வேளையில் அவரே இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி இருந்தது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது.

அதன்படி இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அவர் 12 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த நிலையில் நரேன் ஓவரில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இப்படி இம்பேக்ட் விதிமுறை எதிராக பேசிய ரோஹித்தே இம்பேக்ட் வீரராக விளையாடியதற்கு காரணம் ஹார்டிக் பாண்டியா தான் என்றும் அவரே வேண்டுமென்று ரோகித்தை அவ்வாறு களமிறக்கினார் என்றும் பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் உலா வந்தன.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த உண்மை நிலவரம் குறித்து பேசியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரர் பியூஷ் சாவ்லா கூறுகையில் : கொல்கத்தா அணிக்கெதிரான போட்டிக்கு முன்னதாக ரோகித் சர்மா முதுகுப் பகுதியில் சிறிய அளவிலான காயம் அடைந்திருந்தார். எனவே அவர் பீல்டிங் செய்யும் போது அசவுகரியத்தை உணர்வார் என்பதனாலே முன்னெச்சரிக்கை காரணமாக அவரை முதலில் பீல்டிங் செய்ய அழைக்கவில்லை.

இதையும் படிங்க : பஞ்சாப் அணிக்கெதிரான போட்டிக்கு முன் அணிக்கு திரும்பிய 2 வெளிநாட்டு வீரர்கள் – ஒருவழியாக வந்த நல்ல செய்தி

அதன் காரணமாகவே முதலில் பந்துவீசும் போது கூடுதலாக ஒரு பவுலரை நேரடியாக அணியில் சேர்த்து அதன்பின்னர் ரோஹித் இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்டார். அதற்கும் பாண்டியாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒட்டுமொத்தமாக அணி நிர்வாகம் எடுத்த முடிவுதான் என்றும் பியூஷ் சாவ்லா தெளிவுபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -