- Advertisement -
ஐ.பி.எல்

ரோஹித் சொல்றது உண்மை.. எல்லாரும் பும்ரா கிடையாது.. ஜெய் ஷா இதை மாத்தணும்.. விராட் கோலி கோரிக்கை

கோடைகாலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாகவே ஐபிஎல் தொடரில் பவுலர்களுக்கு கருணை கட்டாமல் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதாக வழக்கமாகும். ஆனால் இந்த வருடம் ஒரு படி மேலே சென்ற பேட்ஸ்மேன்கள் பவுலர்களை மனிதராக பார்க்காமல் பெரும்பாலான போட்டிகளில் சரமாரியாக அடித்து நொறுக்கி வருகிறார்கள் என்றே சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக பெங்களூரு அணிக்கு எதிராக 287 ரன்கள் அடித்த ஹைதராபாத் அணி டெல்லிக்கு எதிராக 5 ஓவரில் 100 ரன்கள் குவித்தது. அத்துடன் லக்னோவுக்கு எதிராக 9.2 ஓவரில் 166 ரன்களை சேசிங் செய்த ஹைதராபாத் சாதனை படைத்தது. அதே போல கொல்கத்தாவுக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் அணி சேசிங் செய்து மிகப் பெரிய உலக சாதனை படைத்தது.

- Advertisement -

விராட் கோலி கோரிக்கை:
இப்படி பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்குவதற்கு பிசிசிஐ கடந்த வருடம் அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த விதிமுறையால் ஒவ்வொரு அணியும் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனுடன் விளையாடுகிறது. எனவே இம்பேக்ட் விதிமுறை சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல்ரவுண்டர்கள் உருவாவதை தடுப்பதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் அதை ஏற்றுக்கொள்ளும் விராட் கோலி இந்த விதிமுறையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மாவின் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். விளையாட்டில் பொழுதுபோக்கு என்பது ஒரு அம்சமாகும். ஆனால் அது சமநிலை குறைக்கிறது. பவுலர்கள் என்ன செய்ய முடியும் என்று நினைக்கின்றனர்”

- Advertisement -

“பவுலர்கள் ஒவ்வொரு பந்திலும் நாம் பவுண்டரி அல்லது சிக்ஸர் கொடுப்போம் என்று நினைக்கும் இது போன்ற அனுபவத்தை நான் அனுபவித்ததில்லை. நாம் உயர்மட்ட கிரிக்கெட்டை விளையாடுகிறோம். அதில் குறிப்பிட்ட அம்சம் மட்டும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. பேட்டுக்கும் பந்துக்கும் சமநிலை கொண்டிருப்பதில் ஒரு அழகு இருக்கிறது. ஒவ்வொரு அணியிலும் பும்ரா அல்லது ரசித் தான் இருக்க மாட்டார்கள். சொல்லப்போனால் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் இருப்பதால் தான் நானும் பவர் பிளே ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறேன்”

இதையும் படிங்க: கடைசி போட்டியில் விளையாடி விட்டு வெளியேறிய ரோஹித் சர்மா.. மைதானத்தில் இருந்த ரசிகர்கள் செய்த செயல் – என்ன நடந்தது?

“ஏனெனில் 8வது இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் காத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் அது சமநிலையை குலைக்கிறது என்று நானும் நினைக்கிறேன். இந்த சூழ்நிலையில் அதை மறுபரிசீலனை செய்வோம் என்று ஏற்கனவே ஜெய் ஷா பாய் கூறியிருந்தார். எனவே விரைவில் சமநிலை கொண்டுவரப்படும் என்று நம்புகிறேன். பவுண்டரி, சிக்ஸர்கள் மட்டும் ஆர்வத்தை ஏற்படுத்தாது. 160 ரன்களை கட்டுப்படுத்துவதிலும் சுவாரசியம் இருக்கும் என்று நான் சொல்வேன்” எனக் கூறினார்.

- Advertisement -