- Advertisement -
ஐ.பி.எல்

டீ குடிச்சுட்டு வரதுக்குள்ள 92/0 டூ 117/6ன்னு ஆகிடுச்சு.. ஆர்சிபி ஜெயிக்க அவங்க தான் காரணம்.. டிகே பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே மூன்றாம் தேதி நடைபெற்ற 52வது லீக் போட்டியில் குஜராத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. பெங்களூருவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் சுமாராக விளையாடி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஷாருக்கான் 37 ராகுல் திவாட்டியா, 35 டேவிட் மில்லர் 30, ரன்கள் எடுத்தனர்.

பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், யாஸ் தயாள், விஜயகுமார் தலா 1 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 148 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு கேப்டன் டு பிளேஸிஸ் அடித்து நொறுக்கி 64, விராட் கோலி 42 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் அடுத்ததாக வந்த வில் ஜேக்ஸ் 1, ரஜத் படிடார் 2, மேக்ஸ்வெல் 4, கேமரூன் க்ரீன் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

டீ குடிச்சிட்டு வருவதற்குள்:
அதனால் 92/0 என்ற நல்ல நிலையில் இருந்த பெங்களூரு திடீரென 117/6 என்று சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. ஆனால் அப்போது தினேஷ் கார்த்திக் 21*, ஸ்வப்னில் சிங் 15* ரன்கள் அடித்து 13.4 ஓவரில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 4வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு 10வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

மறுபுறம் ஜோஸ்வா லிட்டில் 4 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்தித்த குஜராத் ஒன்பதாவது இடத்திற்கு சரிந்தது. இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு பவுலர்கள் முக்கிய காரணமாக அமைந்ததாக பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்கள் பேட்டிங் துவங்கியதும் டீ குடிக்கத் துவங்கினேன். அப்போது 4 ஓவரின் முடிவில் நான் பேட்டிங் செய்வதற்கான தேவை வராது என்று நினைத்தேன்”

- Advertisement -

“ஆனால் அதன் பின் சரிவு ஏற்பட்டதால் நான் பேட்டிங் செய்ய வேண்டியிருந்தது. நான் அடிக்கும் பவுண்டரிகள் கிரிக்கெட்டின் அடிப்படையில் இருந்து வருகிறது. இந்த வேலையை செய்து முடிக்க எனக்கு நானே ஆதரவு கொடுக்கிறேன். பிட்ச் பந்து வீச்சுக்கு நன்றாக இருந்தது. டாஸ் வென்றது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் எங்களுடைய பவுலர்கள் எங்களின் வெற்றிக்கான வேலையை அழகாக செய்தனர்”

இதையும் படிங்க: கொஞ்சம் உடம்பு சரில்ல.. அதை ஸ்விட்ச் பண்றது கஷ்டம்.. ஆர்சிபி’க்காக 110% கொடுப்பேன்.. ஆட்டநாயகன் சிராஜ் பேட்டி

“டு பிளேஸிஸ் – விராட் கோலி பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. ஆனால் முதலில் பேட்டிங் செய்திருந்தால் அவர்கள் இந்த ஷாட்டுகளை அடித்திருப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. உனக்கு வருவதை அடி என்று ஸ்வப்னில் சிங்கிடம் சொன்னேன். ஒருவேளை ஸ்வீப் அடிப்பதை நன்றாக உணர்ந்தால் அதை செய்யுமாறு சொன்னேன்” என்று கூறினார்.

- Advertisement -