- Advertisement -
ஐ.பி.எல்

கொஞ்ச நேரத்துல 4 விக்கெட் விட்டதும் கொஞ்சம் பதட்டமாயிடுச்சி.. குஜராத் அணிக்கெதிரான வெற்றி குறித்து – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52-வது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணியானது பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக ஷாருக்கான் 37 ரன்களையும், ராகுல் திவாதியா 35 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக டூபிளெஸ்ஸிஸ் 64 ரன்களையும், விராட் கோலி 42 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் கூறுகையில் : உண்மையிலேயே கடந்த சில போட்டிகளாக நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறையிலும் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது.

- Advertisement -

களத்தில் எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த மைதானத்தில் சற்று கூடுதல் பவுன்ஸ் இருந்தது. இந்த பிட்ச் எங்களுக்கு வழங்கப்படும் போது நான் பவுலர்களிடம் இந்த கூடுதல் பவுன்ஸ் பற்றி பேசியிருந்தேன். அந்த வகையில் பவுலர்களும் சிறப்பாக பந்துவீசி இருந்தனர்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவை வேண்டுமென்றே இம்பேக்ட் பிளேயராக களம் இறக்கினாரா ஹார்டிக் பாண்டியா? – பியூஷ் சாவ்லா தகவல்

இந்த மைதானத்தில் 180 முதல் 190 ரன்கள் வரை அடித்தாலும் எளிதாக கடந்திருக்க முடியும் ஆனாலும் நாங்கள் ஸ்கோர் போர்டை பார்க்காமல் உள்ளே சென்றதிலிருந்து எவ்வளவு விரைவாக போட்டியை முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக போட்டியை முடிக்க விரும்பினோம். ஆனால் இடையில் நான்கு விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்ததுமே சற்று பதட்டம் ஏற்பட்டது. அதனாலே சற்று பொறுமையாக சென்று போட்டி முடிந்தது என டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -