மனசுலயும் கிங்கு தான்.. டீன் எல்கருக்கு கடைசி போட்டியில் விராட் கோலி செய்த காரியம்

Dean Elgar Virat
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 55 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கெய்ல் வேர்ரின் 15 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவும் சவாலான மைதானத்தில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி, ரபாடா, நன்ரே பர்கர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

மனதிலும் கிங்:
அதைத்தொடர்ந்து 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடி வரும் தென்னாபிரிக்கா முதல் நாள் முடிவில் 62/3 ரன்கள் எடுத்து இன்னும் 36 ரன்கள் பின்தங்கியுள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் தெம்பா பவுமா முதல் போட்டியில் காயத்தை சந்தித்ததால் இந்த போட்டியில் அனுபவ வீரர் டீன் எல்கர் தன்னுடைய தேசத்தை வழி நடத்தும் பொன்னான வாய்ப்பை பெற்றார்.

புஜாரா போல வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பெரிய அளவில் வாய்ப்பு பெறாத அவர் முழுக்க முழுக்க தன்னுடைய கேரியரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்து 5000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து தென்னாப்பிரிக்காவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். குறிப்பாக முதல் போட்டியில் 185 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது வென்ற அவர் 2021/22இல் விராட் கோலி தலைமையிலான இந்தியாவை கேப்டனாக 2 – 1 (2) என்ற கணக்கில் தோற்கடித்து தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

அப்படிப்பட்ட அவர் முதல் இன்னிங்ஸில் 4 ரன்களில் சிராஜ் வேகத்தில் அவுட்டான நிலையில் 2வது இன்னிங்சிலும் முகேஷ் குமார் வேகத்தில் 12 ரன்களில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது தன்னுடைய வாழ்வில் கடைசி முறையாக மைதானத்திலிருந்து மிகுந்த உணர்ச்சிபூர்வமாக டீன் எல்கர் வெளியேறினார்.

இதையும் படிங்க: எமாற்றிய 7 பேர்.. 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழாத 2 வினோதமான சாதனை படைத்த இந்திய அணி

ஆனால் அவர் கொடுத்த கேட்சை பிடித்த விராட் கோலி உடனடியாக கேப் டவுன் மைதானத்தில் இருந்து ரசிகர்களை பார்த்து யாரும் இதை கொண்டாடாமல் டீன் எல்கருக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டி தலை வணங்குங்கள் என்று வெளிப்படையாகவே செய்கை செய்து கேட்டுக் கொண்டார். அத்துடன் டீன் எல்கரை அருகில் சென்று கட்டியணைத்து சிறப்பாக விளையாடியதாக பாராட்டு தெரிவித்து வழி அனுப்பிய அவர் தம்மை மனதளவிலும் கிங் என்பதை காண்பித்தார். மேலும் முகேஷ் குமார், கேப்டன் ரோகித் சர்மா போன்ற இந்திய வீரர்களும் டீன் எல்கருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

Advertisement