எமாற்றிய 7 பேர்.. 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழாத 2 வினோதமான சாதனை படைத்த இந்திய அணி

India 7 Duck
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் இத்தொடரை சமன் செய்ய ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுனில் துவங்கிய 2வது போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் தரமான வேகப்பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு 8 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக கெய்ல் வேர்ரின் 15 ரன்கள் எடுத்தார். அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் பின்னர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

இந்தியாவின் பரிதாப சாதனை:
அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி, ரபாடா, நன்ரே பர்கர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 98 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 62/3 ரன்கள் எடுத்து இன்னும் 36 ரன்கள் பின்தங்கியுள்ளது. அந்த அணிக்கு எல்கர் 12, டே ஜோர்சி 12, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 1 ரன்களில் அவுட்டான நிலையில் களத்தில் ஐடன் மார்க்ரம் 36*, பேடிங்கம் 7* ரன்களில் உள்ளனர்.

முன்னதாக இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை 55 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 0, ரோஹித் 39, கில் 36, ஸ்ரேயாஸ் ஐயர் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 46 ரன்கள் எடுத்து போராடிய போதிலும் எதிர்ப்புறம் கேஎல் ராகுல் 8, ரவீந்திர ஜடேஜா 0, பும்ரா 0, சிராஜ் 0, பிரசித் கிருஷ்ணா என அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

அதனால் ஒரு கட்டத்தில் 153/4 என்ற நல்ல நிலையில் இருந்த இந்தியா அடுத்த 11 பந்துகளில் மேற்கொண்டு 1 ரன் கூட எடுக்காமல் 6 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது. இதன் வாயிலாக 1877 முதல் நடைபெற்ற வரும் டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றின் ஒரு இன்னிங்ஸில் குறிப்பிட்ட ரன்களில் இருந்து மேற்கொண்டு 1 ரன் கூட அடிக்காமல் 6 விக்கெட்டுகளை இழந்த முதல் அணி என்ற மோசமான உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இதையும் படிங்க: 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் மற்றும் ஷர்துல் தாகூர் நீக்கத்திற்கு காரணம் என்ன தெரியுமா? – விவரம் இதோ

அத்துடன் ஜெய்ஸ்வால் 0, ஷ்ரேயாஸ் 0, ஜடேஜா 0, பும்ரா 0, சிராஜ் 0, பிரசித் 0, முகேஷ் குமார் 0* என இந்தியாவின் ஸ்கோர்கார்டில் 7 பேட்ஸ்மேன்கள் 0 ரன்களை பதிவு செய்துள்ளனர். இதன் வாயிலாக 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு இன்னிங்ஸில் அதிக 0 ரன்களை பதிவு செய்த அணி என்ற மோசமான உலக சாதனையும் இந்தியா படைத்துள்ளது.

Advertisement