2 ஆவது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் மற்றும் ஷர்துல் தாகூர் நீக்கத்திற்கு காரணம் என்ன தெரியுமா? – விவரம் இதோ

Ashwin-and-Shardul
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் முதலில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3-ஆம் தேதி கேப்டவுன் நகரில் துவங்கியது. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

இந்த போட்டிக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பிடித்தார். அதேபோன்று ஷர்துல் தாகூர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக முகேஷ் குமாருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது.

இப்படி அஸ்வின் மற்றும் முகேஷ் குமார் ஆகிய இருவரின் வெளியேற்றத்திற்கு சில முக்கிய காரணங்களும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் முதல் போட்டியின் போது உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருக்கும் அஷ்வின் சற்று தடுமாற்றமான பந்துவீச்சையே வெளிப்படுத்தினார். இதன் காரணமாகவே அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

- Advertisement -

அதோடு ஜடேஜா எப்பொழுதுமே வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக செயல்படுவதாலும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது. மேலும் அஸ்வினை விட ஜடேஜாவால் பேட்டிங்கிலும் பெரிய அளவில் கை கொடுக்க முடியும் என்பதாலே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதையும் படிங்க : 23 விக்கெட்ஸ்.. பலமாக நிற்கும் 36 ரன்ஸ்.. திருப்பி அடிக்கும் தெ.ஆ அணியை இந்தியா மடக்கி பிடிக்குமா?

அதேபோல் மறுபுறம் ஷர்துல் தாகூர் கடந்த போட்டியின் போது ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் 26 ஓவர்களில் 101 ரன்களை வழங்கி மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதன் காரணமாகவே அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக முகேஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்கிற வேளையில் இந்த இரண்டு மாற்றங்கள் இந்திய அணியில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement