தேசிய கீதம் ஒலிக்கும் போது இப்படியா பண்ணுவீங்க. விராட் கோலியின் செயலால் – கோபமடைந்த ரசிகர்கள்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி தற்போது கேப்டவுன் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டிகளுக்கு பின்னர் மூன்று வடிவமான கிரிக்கெட்டில் இருந்தும் தனது கேப்டன் பதவியை துறந்த விராட் கோலி தற்போது முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசியுள்ள அவர் தற்போது 71 சத்திற்காக இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கிறார்.

இவ்வேளையில் இந்த தொடரிலாவது அவர் சதம் விளாசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் இன்றளவும் அவர் அந்த சதத்திற்காக காத்திருக்கிறார். தொடர்ச்சியாக அடுத்தடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தனது கேப்டன்சியை துறந்த விராட் கோலி பேட்டிங்கில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இவ்வேளையில் அவரது ஒரு செயலால் தற்போது டிவிட்டர் வாசிகள் மத்தியில் விராட் கோலி பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். அதன்படி இன்றைய மூன்றாவது போட்டி துவங்கும் போது டாஸ் போடப்பட்ட பிறகு இரு அணிகளின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது இந்தியாவின் தேசியகீதம் ஒலிக்கப்படும் வேளையில் அனைத்து வீரர்களும் தேசிய கீதத்திற்கு இணையாக தங்களது கவனத்தை செலுத்தினர்.

ஆனால் விராட் கோலியோ அப்போது சுவிங்கத்தை மென்று கொண்டிருந்தார். அப்படி தேசிய கீதம் இசைக்கும் போது சுயிங்கம் மென்றுகொண்டிருந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியாவுக்கு எதிராக வரலாற்று சாதனையை நிகழ்த்திய குவின்டன் டிகாக் – விவரம் இதோ

அதனை குறிப்பிட்டு ரசிகர்கள் கோலியை விமர்சித்து வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி இரண்டாவது போட்டியில் டக் அவுட் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது 3வது போட்டியில் விராட் கோலி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement