சவால் கொடுக்கும் எல்கர்.. 93 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை.. விராட் கோலியின் மேஜிக்கால் உடைத்த பும்ரா.. நடந்தது என்ன?

Virat Kohli Bails 2
- Advertisement -

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்ஸில் கடுமையாக போராடி 245 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 5, விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் தென்னாபிரிக்க பவுலர்களுக்கு சவாலாக மாறி தனி ஒருவனாக சதமடித்து 101 ரன்கள் விளாசி இந்தியாவை ஓரளவு காப்பாற்றினார். தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

விராட் கோலியின் மேஜிக்:
அதை தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய தென்னாப்பிரிக்காவுக்கு சிராஜ் வேகத்தில் ஆரம்பத்திலேயே ஐடன் மார்க்ரம் 5 ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த இளம் வீரர் டோனி டீ ஜோர்சியுடன் சேர்ந்த மற்றொரு அனுபவ துவக்க வீரர் டீன் எல்கர் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

அந்த வகையில் இந்திய பவுலர்களுக்கு தொல்லையாக மாறிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய சவாலை கொடுத்தது. அப்போது 29வது ஓவரின் 4வது பந்துக்கு முன்பாக தென்னாப்பிரிக்க வீரர்கள் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது விராட் கோலி ஸ்டம்ப் மீதிருந்த பெய்ல்ஸை மாற்றி வைத்தார். அதாவது அதிர்ஷ்டம் வேண்டும் என்பதற்காக நம்மில் பலரும் செய்யக்கூடிய சிறு சிறு மாற்றங்களை போல அவர் பெய்ல்ஸை மாற்றினார்.

- Advertisement -

குறிப்பாக இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் கடந்த ஆஷஸ் தொடரில் இதே போல செய்து விக்கெட்டை எடுத்தார். அதை மேஜிக்கை இப்போட்டியில் விராட் கோலி செய்த அதிர்ஷ்டமோ என்னவோ தெரியவில்லை அடுத்த 2 பந்துகளில் டோனி டீ ஜோர்சியை அவுட்டாக்கிய பும்ரா பெரிய பார்ட்னர்ஷிப்பை உடைத்து அடுத்த ஓவரிலேயே அடுத்ததாக வந்த கீகன் பீட்டர்சனை 2 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார்.

இதையும் படிங்க: தெ.ஆ அணியின் சந்தோசத்தை உடைச்சு.. இம்ப்ரெஸ் பண்ணிட்டீங்க.. கேஎல் ராகுல் பற்றி சச்சின் வியப்பு

அந்த வகையில் விராட் கோலியின் அந்த அதிர்ஷ்டமான மேஜிக் இந்தியாவுக்கு கை கொடுத்தது என்றே சொல்லலாம். ஆனாலும் எதிர்ப்புறம் தம்முடைய கடைசி தொடரில் அனுபவத்தை காட்டிய டீன் எல்கர் சதமடித்து 115* ரன்கள் குவித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறார். அதனால் 2வது நாள் தேநீர் இடைவெளியில் 194/3 ரன்கள் எடுத்துள்ள தென்னாப்பிரிக்கா இன்னும் 51 ரன்கள் பின்தங்கியுள்ளது. எனவே இன்னும் வேகமாக விக்கெட்டுகளை எடுக்கும் முனைப்புடன் இந்தியா விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement