ஆரம்பகட்ட ஐ.பி.எல் போட்டிகளில் விராட் கோலி விளையாடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து முற்றிலுமாக விலகியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் எவ்வித காரணத்தையும் முறைப்படி தெரிவிக்காமல் அவர் அணியிலிருந்து வெளியேறியுள்ளார். அதே வேலையில் இந்திய அணியில் கிரிக்கெட் நிர்வாகமும் விராட் கோலியின் விலகல் குறித்த உண்மையான காரணத்தை வெளியிடாமல் இருந்து வருகிறது.

மேலும் பி.சி.சி.ஐ வெளியிட்ட தகவலின் படி : விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காகவே விலகியிருக்கிறார் என்றும் அவரது முடிவுக்கு மதிப்பு தரவேண்டும் என்று சப்பை கட்டியுள்ளது. இதனால் விராட் கோலி எந்த காரணத்திற்காக அணியிலிருந்து வெளியேறினார் என்பது இதுவரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

- Advertisement -

இப்படி ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரும், விராட் கோலியின் நெருங்கிய நண்பருமான ஏ.பி.டி வில்லியர்ஸ் விராட் கோலி தனது இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதன் காரணமாகத்தான் அணியில் இருந்து விலகியிருக்கிறார் என்று தெரிவித்து பின்னர் அந்த தகவல் தவறானது என மன்னிப்பு கூறியிருந்தார்.

இப்படி முன்னுக்கு பின் முரணாக விராட் கோலி குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில் அவர் இந்த டெஸ்ட் தொடரில் மட்டுமின்றி ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளிலும் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ள விராட் கோலி ஏற்கனவே கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேலாக எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

அதோடு இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் எங்கு இருக்கிறார் என்பது கூட தெரியாமல் இருக்கும் வேளையில் அவர் பயிற்சி செய்திருக்கவும் வாய்ப்பு இருந்திருக்காது. அதேபோன்று எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளையும் தவறவிடும் அவர் கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு மேல் எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வருகிறார். அதேபோன்று முறையான பயிற்சியும் எடுக்காமல் உள்ளார்.

இதையும் படிங்க : ஏர்போர்ட்டிலேயே தடுத்த நிறுத்தப்பட்ட இங்கிலாந்து வீரர்.. 2 மணிநேரம் நீடித்த பிரச்சனை – விவரம் இதோ

இப்படி இருந்து கொண்டு இங்கிலாந்து தொடர் முடிந்த 10 நாட்களிலேயே ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதனால் உடனடியாக அவரால் அணியில் இணைவது கடினம். சிறிது நாட்கள் பயிற்சிக்கு பின்னரே அவர் பெங்களூரு அணியுடன் இணைவார் என்பதனால் ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் அவர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement