கோலிக்கு தோனி ஆதரவளித்தார். ஆனால் எங்க டீமில் என்னை பொறாமையால் கழட்டி விட்டாங்க – பாக் வீரர் வேதனை

Kohli dhoni
- Advertisement -

கிரிக்கெட்டில் நாட்டுக்காக நீண்ட நாட்கள் விளையாடி பெருமை சேர்க்க வேண்டும் என்ற லட்சியத்துடன் களமிறங்கும் வீரர்கள் தரமான எதிரணிகளுக்கு எதிராக முதல் போட்டியிலிருந்தே தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக செயல்பட முடியாது. அதனால் ஒரு வீரருக்கு அதன் கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் தடுமாற்றமான ஆரம்ப காலங்களிலும் தேவையான ஆதரவை வழங்கி தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுத்தால் தான் அவரால் செய்த தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு நாட்கள் செல்ல செல்ல மிகச் சிறப்பாக செயல்பட்டு உலகத்தரம் வாய்ந்த வீரராக உருவாகி பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுத் தரமுடியும்.

Dhoni-kohli

- Advertisement -

அந்த வகையில் தற்போதைய இந்திய கிரிக்கெட்டில் விளையாடும் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, அஸ்வின் மற்றும் ஜடேஜா என ஏறக்குறைய 70% மேற்பட்ட வீரர்கள் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியின் ஆதரவால் இன்று உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உருவெடுத்துள்ளதாக அவர்களே பலமுறை கூறியுள்ளார்கள்.

அதிலும் சச்சினுக்கு பின் இன்று 3 வகையான இந்திய அணியிலும் நம்பிக்கை நட்சத்திர முதுகெலும்பு பேட்ஸ்மேனாக கருதப்படும் விராட் கோலி ஆரம்பத்தில் தடுமாறியதால் அணியிலிருந்து நீக்குவதற்கு அணி நிர்வாகம் முடிவெடுத்தது. ஆனால் அவர் மீது நம்பிக்கை வைத்த தோனி விமர்சனங்களையும் தாண்டி தேவையான வாய்ப்புகளை வழங்கியதை பயன்படுத்திய விராட் கோலி இன்று உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார்.

Kohli-2

பாகிஸ்தான் கோலி:
இந்நிலையில் அதுபோன்ற வாய்ப்புகளும் ஆதரவும் தமக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திலும் அணி நிர்வாகத்திலும் கிடைக்கவில்லை என்று அந்நாட்டிற்காக விளையாடிய அகமது ஷேசாத் தற்போது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். பார்ப்பதற்கு ஏறக்குறைய விராட் கோலியை போலவே தோற்றத்தில் காட்சியளிக்கும் இவரை கடந்த 2015 வாக்கில் பாகிஸ்தானின் விராட் கோலி என்று அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்நாட்டுக்காக 13 டெஸ்ட் 81 ஒருநாள் போட்டிகள் 59 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்ட போதிலும் தமக்கு தேவையான வாய்ப்பை அப்போதைய பாகிஸ்தான் அணி நிர்வாகம் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார்.

- Advertisement -

அதிலும் 2016இல் அப்போதைய பயிற்சியாளராக இருந்த முன்னாள் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் தம்மையும் மற்றொரு வீரர் உம்ரான் மாலிக்கையும் சர்வதேச அளவில் விளையாட தகுதி இல்லாதவர்கள் எனக்கூறி உள்ளூர் கிரிக்கெட்டுக்கு திரும்ப சென்று மிகச் சிறப்பாக விளையாடினால் தான் வாய்ப்பளிக்க முடியும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பரிந்துரை செய்ததாக தெரிவிக்கும் இவர் அதன் காரணமாக தமது வாய்ப்பு நிரந்தரமாக பறிபோய் விட்டதாக ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். அதன்பின் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்காத இவர் கடைசியாக கடந்த 2019இல் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுக்காக விளையாடி இருந்தார்.

Virat Kohli Ahmed Shehzad

பொறாமை:
தம்மை ஒப்பிடு செய்த விராட் கோலிக்கு கேப்டன் எம்எஸ் தோனி ஆதரவு கொடுத்ததாக கூறும் இவர் தமது நாட்டில் தனக்கு அதுபோல் ஆதரவளிக்க யாருமில்லாமல் பொறாமை கொண்டு தன்னை கழற்றி விட்டதாக கூறியுள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த பரிந்துரை ரிப்போர்ட்டை நான் பார்க்கவில்லை. ஆனால் ஒரு பாகிஸ்தான் நிர்வாக அதிகாரி இதை என்னிடம் கூறியிருந்தார். இது போன்ற அம்சங்களை நேருக்கு நேராக விவாதித்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். என்னிடம் நேராக கூறியிருந்தால் அதை சவாலாக எடுத்துக் கொண்டிருப்பேன். அவர்களின் வார்த்தைகள் எனது வாழ்க்கையை காயப்படுத்தியது”

- Advertisement -

“இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அணுகுமுறையாகும். மேலும் அவர்கள் ஒரே கல்லில் 2 பறவைகளை அடிக்க நினைத்தார்கள். இதை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன், மீண்டும் ஒருமுறை கூறுகிறேன். விராட் கோலியின் கேரியரை எம்எஸ் தோனி அற்புதமாக முன்னெடுத்து வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தானில் உங்களின் வெற்றிக்கு யாரும் துணை நிற்பதில்லை. எங்களின் சீனியர் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் உலக அரங்கில் ஒருவரின் வெற்றியை ஜீரணிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள துரதிஸ்டவசமான ஒரு நிலைமையாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : முதல் தொடரிலேயே இந்தியா வெற்றி. லெஜெண்ட் மித்தாலியை முந்தி புதிய சாதனை படைத்த நட்சத்திர வீராங்கனை

இவரின் காலகட்டத்தில் இவர் குற்றம் சாட்டும் பயிற்சியாளர்களாக இருந்த மிஸ்பா-உல்-ஹக் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் 2021 டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்வது பற்றி தேர்வு குழுவினர் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்பதற்காக தாமாக பதவி விலகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement