- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சச்சினுடன் நோ கம்பேரிசன்.. விராட் கோலி 50 வயசு வரைக்கும் விளையாடலாம்.. 3 காரணம் இதான்.. ரிச்சர்ட்ஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 27000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி 82 சதங்களையும் அடித்துள்ளார். அதனால் சச்சினை விட விராட் கோலி சிறந்தவர் என்று இந்த காலத்து ரசிகர்கள் வாதிடுவது வழக்கமாகும்.

அதே போல தொடர்ச்சியாக அசத்துவதற்கு பெயர் போன விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாற்றமாக விளையாடினார். அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக சதத்தை அடித்து தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்தார். இந்நிலையில் ஃபிட்னஸ், விழுந்தாலும் கம்பேக் கொடுக்கும் திறமை, ஆர்வம் ஆகியவற்றால் 50 வயது வரை விராட் கோலி விளையாடலாம் என்று சர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ரிச்சர்ட்ஸ் பாராட்டு:

இது பற்றி ரிச்சர்ட்ஸ் பேசியது பின்வருமாறு. “சச்சின் – கோலி போன்ற ஒப்பீடுகளை நான் நம்புவதில்லை. மாறாக ஒவ்வொரு தலைமுறையும் உருவாக்கிய வீரர்களை நாம் பாராட்ட வேண்டும். தங்களுடைய காலத்தில் இந்த மகத்தான வீரர்கள் விளையாடுவதைப் பார்த்தவர்கள் அவர்களை ஒப்பிடுவதை விட அவர்களுடைய திறமையை பாராட்ட வேண்டுமென விரும்புகிறேன். தங்களுடைய தலைமுறையில் தங்கள் நாட்டுக்காக பங்காற்றிய அவர்கள் பாராட்டுக்குத் தகுதியானவர்கள்”

“அவர்களை மதிப்பிடுவது ரசிகர்களான நமது கையில் இருக்கிறது. அவர்களது ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் எப்போதும் அவர்களுடைய மரபுக்கு பாராட்டுத் தெரிவிப்பார்கள். 2023 உலகக் கோப்பைக்கு முன் சிறப்பாக விளையாடாத விராட் கோலி அந்தத் தொடரில் கம்பேக் கொடுத்து தன்னுடைய உண்மையான கேரக்டரை காண்பித்தார். அவரைப்போல் அனைத்து வீரர்களும் சரிவை சந்தித்த பின் இவ்வளவு சீக்கிரமாக எழுந்து வருவதில்லை”

- Advertisement -

50 வயது வரை:

“அதனாலேயே விராட் கோலியை நான் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவராக கருதுகிறேன். போராடும் குணம், எனர்ஜி, நன்றாக விளையாடுவதற்கான ஆர்வத்தைக் கொண்டிருப்பதாலேயே அவரை சிறந்தவராக நான் மதிப்பிடுகிறேன். ஏனெனில் அவரால் மோசமான காலங்களுக்குள் சென்று மீண்டும் அதிலிருந்து நன்றாக வர முடிகிறது. அவருடைய எனர்ஜி முக்கியம். பவுண்டரிக்கு அருகே எனர்ஜியுடன் செயல்படும் அவர் இப்போதும் கேப்டனாக இருக்கிறார்”

இதையும் படிங்க: 249 ரன்ஸ்.. ஃபீல்டிங்கில் மாஸ் காட்டிய நியூஸிலாந்து.. ஸ்ரேயாஸ், அக்சர், பாண்டியாவால் தப்பிய இந்தியா வெல்லுமா?

“நடுவர்களிடம் அவுட் கேட்பது உட்பட களத்தில் அனைத்து விஷயங்களிலும் அனைத்து நேரங்களிலும் அவர் ஆர்வத்துடன் செயல்படுகிறார். களத்தில் வரக்கூடிய ஒரு தருணத்தைக் கூட அவர் மிஸ் செய்வதில்லை. விராட் கோலியின் ஃபிட்னஸ் மற்றும் கிரிக்கெட்டின் மீதான அவருடைய ஆர்வம் காரணமாக அவரால் 50 வயது வரை கூட வரை விளையாடலாம் என்பது உங்களுக்குத் தெரியாது. சமீபத்தில் துபாய்க்கு எதிராக ஒரு வாரம் முன்பாக அவர் பாகிஸ்தானுக்கு எதிராக சதத்தை அடித்தார். அது இன்னும் விராட் கோலி டாப் ஃபார்மில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது” என கூறினார்.

- Advertisement -